Sunday, 9 December 2012

நினைவே நீ



நிசப்த்தமான நிலவொளியில்
இரவின் சாட்சியாக வானை அலங்கரித்த
நட்சத்திர கூட்டத்தின் நடுவே
என் பார்வையின் எறிதலில்
எழுந்த உண்மை ஒன்றில்
அண்ட வெளிக்கு சொந்தமான பொருள் ஒன்றை
பூமி உரிமையாக்கிவைத்ததை உணர்ந்தேன்

Sunday, 2 December 2012

நாம் ஒருவர்



மீண்டும் படபடத்த
தாவர இதயங்களின் சங்கமத்தில்
மறைக்கப்பட்ட மணல் கீறல்களின்
மௌனங்ளில் புதைந்துள்ள
உண்மைகளின் தேடலுக்கு

சந்தேகத்தின் எழுச்சியால்
இறக்கை விரிக்கும்
கோபத்தின் பெருக்கில்
மாறடித்து துாவும் பூக்கள் யாவும்
மலர்வளையம் ஆக்கப்படும் போது

அற்புதம்



காலநே உன் காலடியில்
மிதிபட்ட காகிதம் ஒன்றில்
பொறுக்கிக் கோர்க்கப்பட்ட எழுத்துக்களுக்கு
பிணம் ஒன்றின் சுவை கேட்கும் மானிட கொளரவங்கள்

இயற்கையின் சீரில்தான் உலகம்
இயங்குகிறது என்றாலும்
தனிமனித உணர்வுக்கும்

Sunday, 14 October 2012

உப்புக்கண்டம்



தினமும் நான் 
விழிக்கும் பாரிஸ் நகரம்

நடக்கும் போதே 
என் வேகத்தைக் காட்டிலும்
நாகரீகம்  இறக்கை கட்டி
மாற்றங்களுடன் இமயத்துக்கு மேலால்
ஏழனம் செய்கின்றது

Tuesday, 18 September 2012

தூரத்தில்



வரிகளில் அடக்கமுடியாத
வசந்தகாலப் பிறப்பொன்றின்
இரம்மியமான நினைவுகளில்
தூசிதட்டப்பட்ட நிலாமுகத்தின்
ஒப்பனையை தொலைத்து விட்டு
தேடும் பிரிவு

வர்ணக்கலவையினால்  வீசப்பட்ட 
எண்ண ஓட்டம்
இயற்கையில் கண்டிராத
வர்ணத்தை தீட்டி நிற்கும்

Tuesday, 4 September 2012

தேர்



நகர வாசல்  அடைக்கப்பட்டு
இறக்குமதி செய்யப்பட்ட
அலங்காரங்களில்
ஊற்றாகிப்போன மூடப்பழக்கங்களுடன்
மூன்றாம் உலக யுத்தத்திற்கு
தயாரான குண்டுகள் போல்
குவிக்கப்பட்ட தேங்காய்களுக்கு
பத்திமுலாம் பூசப்பட்டு
புனிதம் என்ற சொல்லுடன்
வீதியில் குவிக்கப்பட்டிருந்தது

என்றோ ஓர் நாள்
இயற்கைக்கு புறம்பான
உருவத்ததோடு கூடிய 
அந்த சிலை ஏற்றப்பட்ட
ஊர்திக்கு சக்தி கொடுக்க
மனிதர்கள் 

Monday, 27 August 2012

சுதந்திர தாகம்



அவர்கள் கல்லறைகளில் இருந்து
அதற்கான கருவறைகள்
திறக்கப்படட்டும்

எதிர்கால தேவை உணர்ந்த
விடுதலை விரும்பிகளின்
வார்தைகளில் இருந்து பிறக்கட்டும்

எண்ணப்பட்ட சடலங்களின்
ஏக்கங்களில் இருந்த
பூத்தெழட்டும்

சீரழிக்கப்படும் சேலை 
நுால்களில் இருந்து
நெய்யப்படட்டும்


Sunday, 26 August 2012

வாடா மலர் தோட்டம்


நீ பதித்த தடங்களிலே
நினைவு பூத்தெழுக
நின் தூர சுமை மட்டும்
நெஞ்சுடைத்து விம்மி எழ

அங்கோர் மழைக்காலம்
ஆழ் மனது குடை தேட
கீழ் திசையும் மேலாகி
கரு முகிலில் ஆழ்ந்துவிட

காலைக் கரு உடைக்கும்
சேவலினம் தூக்கம் விட
வேலைச் சுமை பருகி
நீந்தும் மானிடர்போல்

Friday, 24 August 2012

தவிப்பு



நினைவுச்சுமைகளுடன்
நிலா முகம் காண
நிழலில் கரை பொழுதாய்
அரளி  விதை தேடும்
ஆத்ம காதல்

வலிக்கும் அவன் உள்ளம்
வரைந்த நாளை எண்ணி
துடிக்கும் இதயத்திடம்
சொந்த உயிரும்  கடன்  கேட்கும்

சொர்ப்பனத்தில் எல்லாமாய்
இருந்த பொன் நாட்கள்
அர்ப்ப அமைதியினால்
அகல வாய்திறக்கும்

வித்தகியே இத்தூரம்
போதும் என்றேன்


Monday, 20 August 2012

ஒப்பாரிகளின் சங்கமத்தில்



எல்லாப்பிறப்பும் எழும்
யோனித் துவாரதின்
வாசலில் இருந்து

நான்கரைக் கோடியும்
நானே கருவாவேன்
என்பதைப்போல

நீந்தும் உலக வாழ்வில்
நிலைக்காத பிறப்புடன்
போட்டி தொடங்குகிறது

ஆயிரம் யானையிலும்
அதன் பலம் அதுவே உணரும்
என்ற நியதியிலும்

Wednesday, 15 August 2012

உடைக்கப்படாத பூவிலங்கு



நாங்கள் வாயை
மூடிக் கொண்டிருந்தால்
இந்தப் பாடலை இசைப்பது யார்

ஆணும் பெண்ணும்
இந்தப் பாடலை இசைப்பதற்காகவே
படைக்கப் பட்டிருக்கிறார்கள்

Saturday, 11 August 2012

நீ எனக்குள் நீரானாய்



மனக் குமுறலால்
வாசல் உடைக்கப்பட
கண்களுடன்
அணைக்க முடியாது
தவற விடப்பட்ட என் கருவறைக்கு

பிறப்பையும் இறப்பையும்
சமனாக எண்ணும்
எண்ணத்தை
தனிமையும் பிரிவும்
ஏக்கக் கடலில் ஆழ்த்தி விட்டது

Saturday, 7 July 2012

திசை ஓடி


தூரிகையாக்கப்பட்ட
உன் கால் பெரு விரலால்
வரைந்த ஓவியத்தில்
சொக்கியது என் சிந்தை

இரவு பகல் இரண்டும்
விதியான போது
எமக்கு  மட்டும் இரண்டும்
ஒன்றானதே

அழிவே அழியுதே


முற்றிப் பழுத்தபழம்
மண்ணில் விழுந்த பின்
மரமாய் எழுவதுண்டு
அற்றாங்கே சில
வெம்பி பழமாகி
வீணாய் போவதுண்டு

பகல் மேல் கறுப்படிக்க
நிலை கூடும் மழைமேகம்
சில காலம் தரித்ததில்லை
சிந்தையும் அதுபோல
சில நேரம் அதுவாக
சில தவறை செய்வதுண்டு

Friday, 6 July 2012

முன் வந்த முதல் சந்திப்பு


அந்த நிமிடம் வருவதற்கு
இத்தனை தொகையாய் மணித்துளிகளை
வைத்தது யார்

சங்கத் தமிழில் தேடிய வார்த்தைகளில்
காத்தல் என்ற சொல்லை வரிகளில்
எழுதியவர்கள்
உணர மறுத்ததால் தான் என்னவோ
உண்மை என்னை எழுதத் துாண்டியதோ

இரவுகளில்  வானைப் பார்க்காதவன் நான்
இன்று
உன் நினைவுகளால்  நிலவையும் மறந்து
நட்சத்திரங்களை எண்ணி
என் கணித அறிவுற்கு
மீண்டும் ஒரு பள்ளி சென்றேன்

Tuesday, 3 July 2012

சுகம்


பட்டாம் பூச்சியின்
வண்ணக் கோலங்களாக
பல நுாறு எண்ணக் கனவுகளுடன்
வாழ்கைக்கு தோண்டப்படும்
அத்திவாரம்
ஆசை எனும் பீடையில்
ஏற்றப்பட்டு
அழகிய எச்சங்களால்

Monday, 2 July 2012

சிறகு


மொட்டின் மலர்சியாக
எம் கண்களின்
முதல் சந்திப்பில்
மெளனம் எனும் காலன்
காவு கொண்ட
பொழுதுகளை
எண்ணி ஏங்குகிறேன்

வார்தைகள்
ஈரமற்று
இசைக்கமுடியாத
உன் நாவால்
செய்கையில் விரல்களாள் மட்டும்
சித்திரம் வரைந்ததே

Sunday, 17 June 2012

வெட்டாச் சுரக்கும்


ஞாபகங்களின் நினைவகளால்
என் கண்கள்
மீண்டும் ஒர் மழைக் காலத்தில்
புதைந்தது

எத்தனை முறை தான் எச்சரிப்பது
என் மனதிற்கு
உருக் கொடுக்காதே என்று


Saturday, 16 June 2012

அதிசய வாசலில்


உன்னதமான
உலக அதிசய கோபுரத்தின்
அடிவாரத்தில் இருந்து

உன்னை தொடும்
தூரம் வந்தும்
தொடமுடியாமல் தவிக்கும்
கரங்களின் சொந்தக்காரன்

அதோபார்
அதிசயக்கோபுரம்
ஆகாயம் தொடும் உயரம்
அழகை இரசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள்

Thursday, 7 June 2012

அவள்


அதோ பார்
நேற்று என்னோடு இருந்தவன்
இன்று அவளோடு இருக்கிறான்

நேற்று
என் உதட்டில் தேன் பருகியவன்
இன்று அவள் உதட்டிலும் தேடுகிறான்

Wednesday, 6 June 2012

அடையாளம்


அந்த தேசத்தை விட்டு
பிரிக்க முடியாத நீங்கள்
எங்கிருக்கிறீர்கள்

ஓய்வும் விடுதலையும்
மனிதனுக்கு தேவை என்றால்
நீங்கள் மனிதன் அல்லவே

நீங்கள் வைத்திருந்த உறுதியும்
நம்பிக்கையும்
எங்களுக்கு சொல்லித் தாருங்கள்

Friday, 1 June 2012

தாயாகிய அவள்


கனவுகளில் கரையும்
பெண்மைக்குத்தான் தெரியும்
அந்த மார்பின்
சுமைகளின் வலி

திங்கள் ஒருமுறை
சிதறும் விதைகளில்
எழாதா ஓர் விருச்சம்
என்ற ஏக்கம்

Wednesday, 30 May 2012

ஈசன் அடி போற்றி


எனக்கும் உனக்கும்
ஏன் இந்த வேற்றுமை
இயங்கும் மனிதன்
இருந்தும் இறக்கிறான்

அடுத்த கிரகமும்
ஆய்வினில் வந்தது
துடிக்கும் இதயமும்
மின்கலம் இயக்குது


Monday, 28 May 2012

இப்படிக்கு


அன்புள்ள மகனுக்கு
ஐயா நலமா
அடுத்த மடல் எழுது
அம்மா நலம் கேட்டு

பத்து மாதம் சுமந்த தாய்
பாசத்தோடு எழுதுகிறேன்
நான் பெற்ற திரவியமே
நல்ல சுகம் நான் ஐயா

Saturday, 26 May 2012

அவனும் நீயும் சுயநலவாதிகள்


ஓ காதலே!
உனக்கு மட்டும்
ஏன் இந்த சக்தி

இந்தப் பிரபஞ்சத்தில்
நீ
ஏன் மனிதனாகப் பிறப்பெடுக்கவில்லை


Wednesday, 23 May 2012

நான்


பசும் வயலும் பனை மரமும்
கருங் காடும்  கடும் உழைப்பும்
வளம் கொழித்த தமிழ் தேசத்தில்
பிறந்தவன் நான்

கொடு முடியர்  கொடும் ஆட்சி
கொன்ரொழித்த குலத் தலைவன்
காரிகலன் காலத்தில்
வாழ்ந்தவன் நான்

Monday, 21 May 2012

எனக்குள் என்ன தேடுகிறான்


என் கண்களில்
என்ன தேடுகிறான்
என் வார்த்தையில்
என்ன எதிர் பார்க்கிறான்

சூடான சுவாசத்தால்
சாம்பலான இதயம்
பாதி வயதை தாண்டியும்
பசி உணராத வயிறு

Wednesday, 16 May 2012

இதுவும் எமக்குள்


அழகு நிறைந்த வாழ்க்கை
தேடி அலையும் மனங்கள்
ஓர் நாள் உணரும் அந்தத் தவறை

எல்லா பிரசவங்களும்
சுகமாக நடப்பதில்லை
சில வேளைகளில்
மரணமும் சம்பவிக்கின்றது

ஒவ்வொறு பிறப்பும்
தோற்றம் பெறுவதில்லை
ஆக்கப்படுகின்றது

Tuesday, 15 May 2012

புது யுகம்


சூரியன் மறைவது
கோள்களின் தவறாதாம்
சுதந்திரம் என்பது
தலைவர்கள் நடப்பிலே

கோழையாய் வாழ்வதும்
வீரனாய் சாவதும்
கொள்கையின் ஈர்பதால்
கொண்டவர் நடப்பிலே

Saturday, 12 May 2012

சமனிலும் மேலே


உங்கள் உள்ளங்களில்
உண்மை உணர்வுகள்
ஊமையாய் துாங்குகின்றது

இயற்கையிலே
படைக்கும் சக்திகொண்ட நீங்கள்
உலகின் பிரம்மாக்கள்

வலிமை என்பது
உங்கள் எழிமையான அன்பின்  முன்
இழகிய இரும்புகலே

Tuesday, 8 May 2012

இது மக்கள் போர்


எங்கள் நினைவு வலிகளை
எழுத முடியாது தவிக்கும்
மொழிகளே
நாங்கள் கூடும்
தினங்கள் எல்லாம்
துக்க நினைவுகளானதே

நீங்கள் உணர்ந்திடமுடியா
வலிகள் நிகழ்ந்த
அந்த நாட்களை
மீட்கும் உதடுகள்
பிரிவு இழப்பு
அழிவு ஏக்கம்
அழுகை என்று
பேசிப் பேசிப்
பிழந்து கிடக்கின்றன

Saturday, 5 May 2012

காலத் தவறு


காலைக் கருவுடைத்து
கண் விழிக்கும்
கதிரவன் போல்
காதல் சுவை பயிர்க்கும்

பருவப் பயிர்களிடை
பார்வை பட்டு விட
படர்ந்த உணர் வினால்
பைந்தமிழ் வாய் காதல் சொல்ல

Friday, 4 May 2012

எல்லாம் அவன் செயல்


பட்டணத்து பண்ணையிலே
மந்தை ஒப்ப எங்களிடம்
பணம் எனும் மேச்சல்காரன்
படுத்துகின்ற  பாடு இது

உதடுலர்ந்து நீ கேக்க
உடல் நிலையும் சூடு பெற
தவிக்கும் வாய் தனை மறந்து
தணல் காற்றாய் திரிகின்றான்

Tuesday, 1 May 2012

எதிரியானதே உலகு


கண்ணீரின் இழப்பை
உணராத மீன்கள்
தண்ணீரோடு உறவாகும்

வாழ்கை என்பது
சூழலால் தீர்மானித்து
அதன் பாதையில் பயனிக்கின்றது

Friday, 27 April 2012

பருவ மழை


மாற்றங்களை ஏற்காது
எங்களை காக்கவேண்டிய
குடைகள்

ஐனநாயக
உரிமையாளர்களின்
கைகளில்

Tuesday, 24 April 2012

தெட்டனைக்கும் கரங்கள்


விளைச்சல் காணாத
பயிர்களின் அறுவடை
விஞ்ஞானம் தான்
என்ன செய்யும்


Tuesday, 17 April 2012

வெப்பத்துடிப்பு

அற்புதமான நிகழ்வுகளை
ஆய்வு செய்யும்
ஞாபகங்களின்
ஏக்கத்தால்
வீசப்படும் பெரு மூச்சுக்காற்றில்
பிரபஞ்சம் வெப்பத்தில் தவிக்கின்றது

மாற்றங்கள்
முன் நோக்கிய பயணத்தின்
சாரதி

திரும்பத் தெரியாத
வளர்ச்சிப்பாதையின்
எச்சங்கள்
நினைவுகளாகவே
எமக்குள்
ப.பார்தீ

Monday, 16 April 2012

கருவறைவாசல்


எங்கள் கருவறைவாசல்
அடைக்கப்பட்டிருக்கின்றது
சாதியாக
இனமாக
மதமாக
மொழியாக
உடைக்கத் துடிக்கும்
எங்கள் சக்தி உள்ளே
அடக்கும் சக்திகள்
அடிமைப்பட்டிருக்கும்
அறியாமையை உணறும் வரை
உடைக்க முடியும்
எனற கனவுகளுடன்
கருவறைக்குள்
ப.பார்தீ

Saturday, 14 April 2012

நாங்கள் ஏனெடா


அண்டம் துளைத்து
அகிலம் நோக்க
கொண்ட பெயரெடா

கொண்ட கொள்கையில்
குழையா நின்று
வென்ற பெயரெடா


மன்றம் போட்டு
மக்களை காத்த
மாணப் பெயரெடா

வந்த எதிரியை
வகையாய் நோக்கி
வென்ற பெயரெடா

உங்கள் இருக்கையை
உரமாய் காக்க
மின்னும் பெயரெடா

இன்று அனைவரும்
இசைவாய் பேசி
தின்னும் பெயரெடா

எங்கள் பெயரினை
ஏலம் விட்டிட
நீங்கள் யாரெடா

உங்கள் கொள்கையை
உறத்தி  சொல்லிட
நாங்கள் ஏனெடா
ப.பார்தீ

காதல்


மதி அது மங்கி
மனமது தீண்டும்
மது அது காதல்

வயதது ஏறி
வாலிபம் முற்ற
வருவது காதல்

Wednesday, 4 April 2012

சாம்பல் பூக்கள்


உங்கள் உடலங்கள்
உளைப்புக்காய் உப்பேறி
உச்சத்தில் நீறாகி
தேசத்தில் படர்ந்துவிட

கண்ணீர் துளிகளிலும்
கை வணங்கும் மனங்களிலும்
எண்ணி முடியாத
ஏக்கத்தை விதைத்தீரே

Sunday, 1 April 2012

தேற்றம்


தீட்ட முடியாத வார்தைக்குள்
செருகி நிக்குது அன்பு
போற்ற நினைக்கும் உள்ளத்தில்
புதைந்து கிடக்குது பாசம்

நேற்று நீ வளர்த்தசெடியில்
நிறைந்திருக்குது பூக்கள்
சோற்றில் நீவைத்த கரங்கள்
சோர்ந்து நிக்குது இன்று

Thursday, 29 March 2012

காற்றாகிய அவள்


சுவாசமாக   உணரும்
நின் பாசத்தில்
என் தாயை சுமக்கிறேன்

நீளமாக வளரும்
நின் கூந்தலில்
என் நேரம் உணர்கிறேன்

தாய்மையே சேயாகு


ஒத்த உசுருக்குள்ள
ஒரு உசுரு வந்து நின்று
நத்தை வாழ்கையாய்
நளினங்கள் செய்கிறியே

தொட்டுப் பார்க்கவா
சுகத்தை சுவைக்கவா
தட்டுத் தடுமாறி
தலை கால் தடவவா

உள்ளே இருந்து கொண்டு
ஊமைக்கதை சொல் கிறியே
வில்லாய் வளைந்து
வீரத்தோடு உதைக்கிறியே

Wednesday, 28 March 2012

மௌனம்


உடைக்கப்படாத
மெளன மனத்ததால்
ஊமையாகிய அவள்
என்னை தனிமையில் பேசவைத்தாள்


Sunday, 25 March 2012

மாயக்காதல்


மலர் போல்
மங்கை ஒப்ப
மன்னனும்
மலரை நோக்க
மதியது

Saturday, 24 March 2012

மரணம்


தாய் தந்தை
தங்கை என்றும்
மனைவி பிள்ளை
மக்கள் என்றும்
நேசங் காட்ட விருப்பமில்லை

வானம் பூமி
காற்று என்றும்
நீர் நெருப்பு
அழகு என்றும்
இரசனை கொள்ளத் தெரியவில்லை

காதல் வீரம்
காமம் என்றும்
கோவம் நேசம்
கொள்கை என்றும்
நேர்மை காட்ட தெரியவில்லை

ஆழம் இந்த பூமியிலே
அதிகமான நேர்மையோடு
நேசத்தோடு வந்து உன்னை
பாசத்தோடு பற்றப்போகும்
உண்மை தானே நானுமிங்கே
ப.பார்தீ

Thursday, 22 March 2012

அன்புள்ள அம்மாவிற்கு


இரத்த வாடையில்
சுவாசம் தொலைத்த உன்னை
உணராது விட்டாரே

நேற்றுப் புதைத்த
உடலங்களில் நெளிந்த புழுக்களின்
எண்ணிக்கை மறந்தாரே

தோற்றுப் போனார்
என்று எண்ணி
துரும்பாய் நினைக்கிராரே

பூட்டிவைத்த ஏக்கமெல்லாம்
புழுங்கிப் பொரிதல் கண்டு
காற்றில் பறக்கிறதே

நேற்று இன்று நாளை என்று
நித்தம் ஒரு விலையும் பேசி
நீதி சொல்கிறாரே

போற்ற உந்தன் பாதத்திற்கு
பூ மலர் பறிப்பதற்கு
போராட்டம் வேண்டும் அம்மா

போக விடை தாரும் அம்மா
உண்மையான பொய்கள் முன்னே
உம்மை நாமும் மெய்யாக

ப.பார்தீ

Friday, 16 March 2012

ஆன்மா


நான் அரன்மனைக்குள்
பிறந்தவனல்ல
அவர்கள் அடக்குமுறையை
உடைக்க வந்தவன்

உவமைகள்  சொல்லி
ஒப்புதல் விளக்கம் சொல்ல
உண்மை அறியாதவர்களா
நீங்கள்

எங்களுக்கான பணி
ஈற்றை எட்டாத
இழுத்தடிக்கும் திட்டங்களுக்குள்
முடங்கிக்கிடக்கின்றது

விதைகள் என்றும்
தனக்குள் மாறி
விருட்சத்தை தோற்று விக்கும்
நான் விதை

சுமையான எங்கள் வாழ்கையில்
சுய புராணம் பாடி
சுயலாபம் தேட
நான் அரசியல்வாதியல்ல

அன்னியன் விந்தில்
அதிக ஆக்குரோசம் பெற்று
உங்கள் கருவறையில்
உங்களால் வளர்கக்கப்பட்டவன்

என்னை அழிக்கும் சக்தி
எமனிடம் அல்ல
நான் உங்கள் கூட்டில் வாழும்
ஆன்மா

ப.பார்தீ

Thursday, 15 March 2012

வாலிபம்


விழிகளின் கசிவில்
விழைந்த எம் உறவில்
புதுமைகள் எல்லாம்
பொசுங்கியே போனதே



ஏதும் ஒரு நிலையில்
ஏக்கங்கள் தொடர
வருமொறு அழைப்புக்காய்
வாலிபம் ஏங்குதே



குளிர்பனி கூட
சுடுமென எண்ணி
தனிமையில் உன்னை
சுமக்குதே நெஞ்சு



இனிதொரு பொழுதாய்
விடியலும் எழுப்ப
ஒளிதரும் நிலவே
ஒழிந்தது ஏனோ



நிஐமென எண்ணி
நிழலையும் வியக்குறேன்
நினைவுகள் எல்லாம்
நின் முகம் காட்டுதே



வரிகளில் சொல்ல
வார்தைகளில்லையே
வாலிபம் கசங்கும் முன்
வாழ்கையே ஓடிவா



ப.பார்தீ

Sunday, 11 March 2012

இது மறுவாழ்வு


வறண்ட காட்டில்
விழுந்த செந்தணலின்
அகன்ற வாய்க்குள்
விழுந்த பசும் செடியாய்

தேவைகளால் துாண்டப்படும்
உணர்வுகளை
கடிவாளமிடமுடியா  மனங்கள்
ஆசை ஆற்றில் நீந்துகின்றது