Friday 30 October 2015

துரோகத்தில் சிவந்த தொடுவானம்


விடிவை விரும்பாத மேகங்கள்
எல்லாப் பொழுதுகளிலும்
சூரியனைச் சூழ்ந்துகொள்கின்றது

கனவுக்குள் ஒலிக்கும் உயிர் மொழி.


மந்தமாய் மனதை வருடும் ஒளிக் கீற்றில்
மறைந்திருந்து பார்க்கும் பூவிடம்
மறுபடியும் 
காதலைச் சொல்கிறேன்

நிறமூறிய துயரம்


அனுபவங்களின் நினைவுகளைக்கொண்டு
வாழ்வுக்கு உயிர் ஊட்டத்
துயரங்களை
வண்ணங்கள் நிறைந்த தொட்டியில்
நிறைத்திருக்கின்றேன்

பனிமுறிந்த நாட்கள்


விடியலின் நட்சத்திரங்கள்
ஏளனம் செய்ய நான் 
நடக்கும் தெரு 
எனக்காய் விரிந்து சென்றது

ஊர் விலாசம்

ஊரின் சுகம் அறிய
என்னிடம் இருக்கும் 
சில்லறைகளை எண்ணுகிறேன்

"அங்க போய்ச்சரி நல்லா இரு"என்ற
அம்மாவின் வார்த்தைகள்
காதில் ஊறிக் கணக்கைக் குழப்புகின்றது

நினைவோர் பிரளையம்


இருளுக்காய் காத்துக்கிடக்கும்
அந்திப்பொழுதைப்போல்
மூச்சுக்காற்றில் அவள்
அவரோகணத்தில் நகர்ந்து செல்ல

மரணம் கொள்ளும் வாழ்வு.


இடுகாடுகள் வெறித்துப்போய்
ஊரெலாம் பிணக்குவியலை
புழுத் தின்ன

இருள் காவும் மனங்கள்

மார்புக்குள் மறைந்திருக்கும்
மனதையும் 
மனதுக்குள் மறைந்திருக்கும்
உணர்வையும்
அறியாத பிண்டங்களை
உண்மையின்சாட்சி கொண்டு
கரைக்க போகின்றேன்.

நித்திய வாழ்வு


கோழி, ஆடு, மாடு, கோயில்மணிகளின்
சமிக்கைப் பொழுதுகள்
மறந்தது

ஆழிக்குள் மூழ்குமோ அறம்


காலத்தில்
கடந்துவந்த நினைவுகளைக்
காக்க
கடலின் ஆழத்தில்
கரைந்து போகா
வீடு கட்டுகிறேன்

நான் கவிஞன் ஆகப்போகிறேன்


கையில்
முள்ளும்
சொந்தத்தில்
சில வார்த்தைகளும் உள்ளது

கனவின் நிறம்

என்
கனவுகளுக்கு வண்ணம் பூச
விரும்புகிறேன்


யாரும் கண்டிராத
கற்பனை செய்திராத
தூரிகை வைத்திருக்கின்றேன்

அகதிக் கனவு


கனவுகள்
ஏராளம் பெருகின

இருக்க இடமில்லாது
தூக்கத்தை மறந்து
பிசத்தல்
வார்தைகளாய்ப் பிரசவித்தது

கவிதை ஒரு பேக்காட்டு


உணர்ச்சிகளை சொற்களாகக் காட்டினால் கவிதை என்கிறார்கள் உண்மையற்று கற்பனையில் கூறினாலும்
கவிதை என்கிறார்கள்

கற்பனைகுண்டோ காலமெனும் உண்மை


கட்டிலின் கீழே
தூசிபடிந்த
பாட்டியின் பழைய 
இறங்கு பெட்டிக்குள்
உள்ள அவள் நாளேட்டின்
உண்மை எழுத்தைப்
புணரமுடியாத கண்களைப்போல்
காரணம் தேடி அலக்கழியும்
வாழ்கை
புதுப்புது அர்தங்கள்
உணர்த்திச் செல்ல

காணாத இருபது


சப்பாத்தின் விலை
ஒன்பது தொன்னூறு
விற்பவனிடம்
வாதாடிக் களைத்துவிட்டேன்
குறையும்
இருபது சதத்திற்காய்

காலம் தரும் மாய ஒளி.


பிரிவில் வறழும்
காதலர்போல்
விழுந்து கரைந்த
சருகுகளைக் காணாது
தனித்துக்கிடக்கும்
மரத்தடி
அவள் உதட்டின்
முறுவல் போல்
அரும்பும் குருத்துகள்
காலத்தைக் காதலித்து
பொழுதோடு
காமுற
தாவணி மறைவில்
ஓரக்கண்ணால்
உசுப்பிவிடும் அவள்
பார்வை போல்
வசந்த கால
வாசல் கதவுகள்
மெல்லத்
திறக்கின்றது

படராயோ பனிபோல்


எப்போதும் போலவே
மேற்கின்
அடிவானம்
மெல்லக்
கறுக்கின்றது
அதன் வரவில்
நட்சத்திரப் பூக்களின்
நடுவே
முழுமதி ஒன்று
என்னைப்போல்
ஏகாந்தமாய்
இரவை
இரசிக்கின்றது

தேன் தீண்டும் மலர்


என்னவென்று சொல்வதடி தோழி-என்
துனைவன் சென்னதையும் செய்தையும் -சொலென்றால்
என்னவென்று சொல்வதடி தோழி

சாயம்


சாயம் பூசிய விரல்கள்
விளக்கி நின்றது
ஜனநாயகம் ஓர்
பச்சோந்திகளின் வாழ்விடம் என்று

ஐ. நாவே என் சாட்சியை ஏற்றுக்கொள் .


என் முற்றத்தில்தான் அவள் பிறந்தாள் அவள் அண்ணனும் பிறந்தான் என் வயது அவர்கள் பாட்டன் வயதிலும் பல ஆண்டுகள் மூத்தது உங்களுக்குத் தெரியும் நீங்கள் கொடுத்த சுதந்திரம் சிறையிலும் கொடியதென்று எத்தனை முறை அவர்கள் என்னை தனியாகவிட்டு போயிருக்கிறார்கள் எத்தனை முறை நான் உறிஞ்சிய நீரில் தமிழனின் இரத்தவாடை எத்தனை

என் வாழ்கை


என் வாழ்கை போல்
வசந்த காலத்தின் துடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல என் கண்களில் இருந்து மறைக்கிறது .

சுயனலம் அற்ற போர்வீரர்கள் போல் இலைகள் மண்ணில் குவிந்து கிடக்கின்றது

நடு வழியில்


புண்செய்யும் பணமோகம்
தந்திட்ட பேர்
வலியால்

பொருள் தேடி -நடு வழியில்
பிரிந்தோமே
பெரு வாழ்வை

ஆழம்.

காதல் 
காரணமின்றி சிரிக்கக் கற்றுத்தந்தது.
காதல் 
காரணம் தேடிச் சண்டையிடக் கற்றுத்தந்தது
காதல்
காரணம் இன்றிப் பிரியவும் கற்றுத்தந்தது

காதல் எனக்குக் கவிதை எழுதவும் கற்றுத்தந்தது

காதல் என் போதி மரம்

அது வாழ்கையின் ஈர்ப்பு
உலக இயக்கத்தின் ஆன்மா

அது வலிகளில் இருந்து ஆழமானது

அது முட்கள் நிறைந்த
அழகிய பூவனம்

அது சுவாசம்
பிரிவுக்கு இடம் கொடுக்காத துடிப்பு

அது திருப்தி பெறாத தேவை

அன்பு பாசம் நேசம் பக்தி எல்லாம் சேர்ந்த கலவை.

என்னை
நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? என்று கேட்பது புரிகிறது.
ஆம் என்றால்
அது
உங்களையும் ஆழமாக்கும் காதலில்
ப.பார்தீ

வீதியில்


அசடு அசடு 
அப்படி எல்லாம் 
நடந்து கொள்ளக்கூடாது

உதிரும் நினைவுகள்.


மழை ஓய்ந்த 
பொழுதின்
மெல் இருளின்
வழியே
இதமாக
முட்டி மோதும்
குழிர்காற்றில்

Wednesday 28 October 2015

என்னடா உலகமிது


நன்றி என்று சொன்னால்
நாய்போல்
பார்க்கிறான்
நல்ல
தமிழில் நான்கு வார்த்தை
கதைத்துவிட்டால்

ஒரு நாள்


ஒரு நாள் 
அடர்ந்த பனிக் கூதலில்
நட்சத்திரங்களின் மெல் ஒளியின்
படர்தலில்

போருக்கு

அவன்
இருப்பது ஒரு விளையாட்டு மாடம்
விளையாடும் குழந்தைகளில் அவன்
அகதிப்பட்டம் கேட்ட சுதந்திர தாகம்.

அவன் விளையாடுகிறான்
காலத்தின் காயத்தை கலைகளாய்ப் படைத்து சிலைகளாய் வடித்து
சிந்தையாக்கி



அவன்
அங்கிருக்கும் பொருட்களால் ஆயுதம் செய்கிறான்
அதைக் கொண்டு தாகர்க்க அடுக்குமாடி
வீடுகளும் கட்டுகிறான்
எதிரில் நிற்கும் குழந்தைகளை
எதிரியாய் எண்ணுகிறான்

நான் காட்டிய ஊர்...


அடையாளம் தெரியாமல்
அரச மரங்கள் எல்லாம் புத்தனின் தியானத்தில்
இரத்தம் சொட்டிக்கொண்டு இருந்தது

என் அம்மாவின் சமாதியின் மேலே
சில குடிசைகள் சிங்களம்பேச
அதன் அருகில் புது வீதிகள்
திசை மாறிக்கிடந்தது

அந்நியனின் காலடி ஓசைக்கு
அகிலத்தையே கூட்டும் நாய்கள்
குரைத்துக் களைத்துபோய்
அவன் காலடியில்
உணர்வற்றுக் கிடந்தது

காலையோ மாலையோ
கள்ளுத்தவறணைகள் நிரம்பி வழிந்தது
கலாச்சாரம் சில அம்மாக்கள் முந்தானையில் தொங்கிக்கிடந்தது

பழையவீடுகள் புதியசுவர்களால்
தனித்து நின்றது
பச்சை உடைகள் மிச்சமான கற்பையும்
எச்சில் செய்தது

இதனைக் கண்டு என்மனம் குமுறி
அழுவதற்குள்
அப்பா எங்கள் நாடு எங்கே? எனறாள்
பிள்ளை
ப.பார்தீ

கண்ணாடி முன்...


அந்தவயது ஒரு விசித்திரமானது பருவத்தைச் சுமந்து கொண்டு சில பருக்கள் முகத்தை முத்தமிட்டது எண்ணற்ற கனவுகள் இயற்கையையும்மீறி மாற்றத்தில் காதல் கொண்டது

கட்டுப்பாடுகள் எல்லாம் இறுக்கப்பட்ட தூக்கு கயிறாக பிணைந்து கிடந்தது அடயாளம் தெரியாமலே அங்கங்கள் மாற்றங்கண்டது

அப்போது
தனிமை வரமாகப்பட்டது வாதாட முடியாத வேதாந்த சித்தாந்தங்கள் ஒரு புதியதை பார்க்க எண்ணியது அதன் அழகில் மூழ்க எண்ணியது அதற்காக தேடவும் தொடங்கியது

இது ஒரு மாற்றத்தை தேடிய வளர்ச்சி தட்டிக்கொடுக்கும் கைகளை முத்தமிடும் ஏக்கம் அதன்
அன்பின் பிடிப்பில் அழகாகும் வாழ்கை
விதையாய்

Monday 2 February 2015

பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்.



பணமே !
நானும் உன்னைப்போலவே
ஓடிக்கொண்டிருக்கின்றேன்.
நான் அகலவிரித்த இரு கைகளுக்குள்
எண்ணிலடங்காத ஆசைகள்

அறிந்தும் உணராதமனம்....


எரிந்து விழுகிறேன் என்று கூறுகிறாய் 
நாம்விழுந்ததே நெருப்புக்குள் என்றுதெரியாது

அது எப்படி?
மகிழ்வின்போது தேடாத நம்மை 
கோவத்தின் தேடல் மட்டும் ஆழமாய்
அன்புக்குள் புதைத்து விடுகிறது