Friday 30 October 2015

என் வாழ்கை


என் வாழ்கை போல்
வசந்த காலத்தின் துடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல என் கண்களில் இருந்து மறைக்கிறது .

சுயனலம் அற்ற போர்வீரர்கள் போல் இலைகள் மண்ணில் குவிந்து கிடக்கின்றது


ஏகாந்தம் பேணிக்கொண்டு இறக்கையின்
துடிப்பில்
உலகை அளக்கும் தனித்த பறவைபோல்
மெல்லிய குளிரின்
வருகை
அணைப்புகளற்ற வாழ்கையின்
ஏக்கத்தை நினைவுபடுத்துகிறது

வருடம் ஒருமுறை மாறிவரும் பருவத்தின் புதுமை
என்
முதுமையின் நீளம்போல்
சோர்ந்து கிடக்கின்றது

பிரிந்த நாள் முதலாய்
ஊர்நினைவு
வருமானமின்றிக்
கட்டமுடியாத வட்டிக் கடனைப்போல்
உள்ளுக்குள் பெருக்கி கொண்டே இருக்கின்றது
ப.பார்தீ

No comments:

Post a Comment