Monday 28 November 2011

விபச்சாரி


ஆண்களின் பார்வையில்
அவள் ஓர் நாயகி
அகிலத்தின் பார்வையில்
அவள் ஓர் அசிங்கம்
அடியேனின் பார்வையில்
அவள் ஓர் அபலை

இச்சையின் உச்சத்தால்
எச்சத்தை தேடிக்கொண்டு

Monday 21 November 2011

வசந்தமும் பிறக்குமே


தென்திசை நோக்கினால்
வடதிசை அழியுமா

எண்திசை நேக்கி -நாம்
முது நிலை அடைந்தவர்

மணலதால் சிலையது
உயிர் பெற நினைக்குமா

Monday 14 November 2011

இனிதொரு மிருகமாவோம்


ஆறறிவில் ஓன்று இங்கே
அழிகணக்காய் போக வேண்டும்
கெட்ட குணம் அத்தனையும்
கெடு முதலாய் மாற வேண்டும்

ஒரு சாண் உண்டி கொள்ள
உணவு நாம் தேடவேண்டும்
அதற்காய் ஒற்றுமைாய் வாழ
உள்ளுணர்வில் பழக வேண்டும்

வர்க்க பேதம் அத்தனையும்

Saturday 12 November 2011

சுனாமி தானே எம் நண்பன்


சென்ற பின்தான் தெரிந்ததென்ன
கண் இருந்தம் குருடர் ஆனார்
காது கேட்டும் செவிடர் ஆனார்
வாயிருந்தம் ஊமை கொள்ள
காலம் தாழ்த்தி வந்த உண்மை
காட்டாற்றில் எழுத்து போல

இங்கு தான் நடந்ததென்ன
மூக்கு முட்ட சாப்பாடு
நாக்கு சுவை சாராயம்
பேச்சுத்துனை தாசிப் பெண்கள்

Thursday 10 November 2011

மாவீரக் கண்மணிகள் நினைவாக ஒரு கும்மிப்பாடல்


கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
கார்த்திகை மாதத்து தீபங்களைப் போற்றி
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கந்தகப் பொறி கொண்டு வந்தோரை எரி கொண்ட
காலத்தின் வீரரைப் போற்றி
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

கரிகாலன் பின்வந்த கார்த்திகை வீரரை
கரிகாலன் பேர் சொல்லி
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி

Wednesday 9 November 2011

நிர்வாணம்

கேட்பவர் காதுக்கு
கேடுகெட்ட சொல்லாகும்
பார்ப்பவர் கண்களுக்கு
பரவசக் காட்சியாகும்

அறிவுடை மக்களுக்கு
அதுகுமொரு சொல்லாகும்

ஓசைக்கு உருக் கொடுத்து
உருவான மொழிகளிலே
உன்ன தமாம் தமிழ்மொழியில்
கருவான பதங்களிலே
உருவான ஒரு சொல்லே
நிர்வாணம் என்ற பதம்


Monday 7 November 2011

ஏக்கங்கள்


''வண்ணத்துப்பூச்சியே''  நீ
என் எண்ணத்தின் ஆட்சியே நீ
ஓர் நாள் வாழ்கையடி நீ
என்னை உற்று நேக்க வைத்துவிட்டாயடி

இலை ஒன்றில் இட்ட முட்டை நீ
மயிர் கொண்டு பிறப்பெடுத்தாய் நீ
மாற்றார்கள் தெட்டு விட்டல் நீ
மயிர் கொண்டு தாக்கிடுவாய் நீ

Sunday 6 November 2011

கேள்விகள் கேளடி தோழி


தோழியே உன்னிடம் ஓர் கேள்வி
கேட்பதால் நீயுமோர் பாவி
யாரிடம் உள்ளது ஞானம்- அதை
கேள்விகள் ஆக்கனும் நீயும்

பாவங்கள் செய்திட்ட மனிதர் - இப்
பாரினில் படைத்தனர்  இறைவன்
ஆண்டவன் பேரினைச் சொல்லி - இங்கே
அடிமைகள் வந்தனர் பாராய்

என் தோழி


பூக்களின் மலர்ச்சியே என் தோழி
உந்தன் புன் முறுவள் தெரியுதடி என் தோழி
சூரிய உதயமடி என் தோழி
உந்தன் சிந்தையின் வெளிச்சமடி என் தோழி

முழுமையான கண் இருந்தும் என் தோழி
முழுவியலம் பார்ப்பதுவும் ஏன் தோழி
சிந்தையின் வித்துத்தானே என் தோழி
சகுணத்தடை பார்ப்பதுவும் ஏன் தோழி

Saturday 5 November 2011

எதற்காக இப்பிரிவு?


என் இதயத்தில் கனத்த
இதிகாச நாயகியே

வரலாற்றில் காணாத
வண்ணமிகு ஓவியமே

கவிஞர்கள் வார்த்தைகளில்
கண்டிராத கலைச்சுடரே

கருவாக எனைச்சுமந்து
உருவாக்கி விட்டவளே

மதியோடு நான் நடக்க
வழி கூட்டிவந்தவளே

பட்டணத்து மாப்பிள்ளை


பட்டணத்தில் மாப்பிள்ளையாம்
பெண் கேட்கச் சொல்கிறார்கள்
பேசுவது இலகு தானே
பட்டணமே மாப்பிள்ளைதான்

வெளி நாட்டு மாப்பிள்ளைதான்
வெள்ளி தங்கம் ஆகியாச்சு
தொலை துார உறவு பேண
தொலை பேசி உறவாச்சு