Saturday 31 December 2011

மாற்றத்துள் சிந்திப்போம்


மாற்றங்களோடு கூடிய
மனித சிந்தனைக்குத் தீர்வு
மரணமே


Friday 30 December 2011

நாத்திகம்


உண்மைகளுக்கு  அப்பால்
ஏன் இந்த உலகம்
இயங்குகின்றது
கேள்வி கேட்டுத்  தொடங்கட்டும்
நாத்திகம்

பந்தில் செலுத்திய காற்று
முழுமை
"உண்மை"
பொருட்களின் தோற்றம்

Monday 19 December 2011

வேண்டி நிற்கும் புதுவரவு


வற்றிய கிணத்திலே
வரத்து நீர் நிறைவது போல்
வந்து நிற்கும்
தேதி ஒன்று

வரு முன் காப்பதற்கு
வழிகள் பல தொக்கி நிற்கும்
வந்ததற்குள் வாழ்வதென்னி
வாழ்க்கையது கலங்கி நிற்கும்


Friday 16 December 2011

வெடிக்கும் உண்மை


காலத்தின் பொறுமையால்
வளர்ச்சி காணும்
உயிரினம் வரும் போது
முழுமை பெரும்
பொறுமையோடு காத்து நிக்கும்
பசி எடுத்த கொக்கு


Thursday 15 December 2011

பயிர்


விதைத்து விட்ட பயிர் தனை
பருவம் பார்த்து பாடு செய்து
பெரு விளைச்சல் பெற்றிடுவான்
விவசாயி

தொட்ட சுகம் பிறப்பெடுக்க
வந்த தொரு பயிருக்காக
பக்குவங்கள் செய்ய வேண்டும்
பாரில் உள்ள பெற்றோர்கள்

Tuesday 13 December 2011

விலை போச்சே


சிறுதொழில்கள்
சிதைவுற்று
சில்லறைகள் தாளுமாகி
பணவீக்கம் பந்தாகி
விளையாடத் தொடங்கியதே


Monday 12 December 2011

என்நாளும் வாழ்க்கை


இன்பம் பிறர்க்கென்றால்
துன்பம் அடைந்திட
துட்டர்கள் உள்ளார்கள் தோழா
நல்லதை நாம் செய்ய
நாளும் தவிக்கனும் தோழா


Saturday 10 December 2011

தொடரும்


மண் மரம்
செடி கொடி
காலம் கடந்த -  ஒரு
பூ

இச்சையின்றித்
துடிக்கும் இதயம்

Saturday 3 December 2011

வாய்களும் சுவைக்குதென்னை


பாய் விரித்து படுக்க எண்ணி
கீழ் நிலத்தை மெழுகவில்லை
பச்சைப் பிள்ளை  படுக்க என்று
முந்தானை விரித்துவிட்டேன்
வீதி உலா வந்த  _காவல்க்காரன்
காமவெறி கொண்டு
கசக்கி விட்டான் காகிதமாய்


Thursday 1 December 2011

நாடு ஆகுமே


அண்டி வாழ்ந்து அண்டி வாழ்ந்து
அடிமையாகி அடிமையாகி
கோபத்தோடு நாம்
கொடி பிடிக்கத் தொடங்கினோம்

வந்த காலம் யாவுமே
வசந்த காலம் அல்லவே
உண்ட சோற்றில் பிழை கூட
பிடிக்கும் கூட்டம் நாமடா