Tuesday 26 February 2013

அழியும், ஆகும்



பிரிவே பிரபஞ்சத்தில்
பிழந்து கிடக்கும்
எண்ணற்ற வடிவங்கள்

இரவின் தனிமையில்
விழித்துக்கிடக்கும் நட்சத்திரம்
ஒவ்வொன்றும் அதற்குச்சாட்சி

அந்தப்பக்கம் கிழிஞ்சு போச்சு



சில ஆண்டுகளுக்குமுன்
வேந்தனின் அரியனைக்கு
விசிரிய சாமரம்

விழாகாலச் சிறுவரின்
கள்ளன் காவல்த்துறை
விளையாட்டாக

ஒழியச் சொல்லுவாராம்
ஒழிஞ்சத தேடியும்
பிடிப்பாராம்

என்ன இலாபம்
என்ன நட்டம்
கணக்கிலயும் புலியாம்

போகட்டும் போகட்டும்
போனது பயங்கரம்
என்பாராம்

நாளைக்கு அவர் வீட்ட
செங்கொடியன் கிட்டிடா
சினைச்சேதம் ஆகிடுமாம்

நீதிக்கு கண்ணிருக்காம்,,,,
பாவம்
அது நிறக்குருடு ஆகிட்டடோ?

ஒப்பாரி கேக்கல்லயாம்
சப்பானி ஆகிட்டாறோ
தப்பா நினைக்காதங்க
அவர் அப்பாவும் அப்படிதான்

அரசியல் விளையாட்டில்
அம்மாவும் அப்படிதான்....

ஐயோ 
இது என்ன ஒப்பாரி
அந்தப்பக்கம் கிழிஞ்சு போச்சு
சுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசு!!!
ப.பார்தீ