Monday 24 June 2013

நினைவில் பூத்த அல்லி


அந்திவானம் கறுத்திருக்கு
அடைமழையும் காத்திருக்கு
நெஞ்சுக்குள்ள பூத்த அல்லி
கரை தடவக் காத்திருக்கு

நிலவுக்கு தூது செல்ல
தென்றலும் தவமிருக்கு
நெஞ்சுக்குள்ள அவள் நினைவோ
நீரூற்றாய் வழிந்திருக்கு

விலக்கல்ல நான்


தெட்டு விட 
எத்தனித்துக் கொண்டே இருக்கின்றேன்
ஏனோ முற்றுகையிட முடியாத 
எண்ணம் எனக்குள்

தட்டித் தட்டி
பாளையின் பயனை அருந்தியபோது
வலிக்கும் சுகத்திற்கும் இடையான
இரட்டை தன்மையில்
எண்ணத்தை விழிக்கின்றேன்

உளைப்புக்கும் வறுமைக்கும் இடையில்
ஒற்றுமையைத் தேடி 
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் இடையில்
மரணம் ஊஞ்சல் ஆடுகின்றது

தனிமை கரைத்த பொழுது


மேகம் கருக்கும் நேரம் பெண்நே
மின்னல் ஒழிரக்கண்டேன்
கூந்தல் மறைவில் நின்று கண்நே
வானம் கரையக்கண்டேன்

கலங்கிப்பின் தெளியும்


எல்லாவற்றைவும் மறந்துவிட்டாயா?

பார்க்கப்போனால் மொளனமான இந்த உலகத்தில்
நமக்குள் இருக்கும் காற்று 
ஆத்மாத்தமாக நம்மை இயக்குதென்பேன்

நமது இதயங்கள் என்றும் 
சச்சரவிட்டுக் கொண்டதில்லை
நமது எண்ணங்களைத் தவிர

எண்ணங்கள் அவ்வப்போது
இங்கிருந்து பொறுக்கி
கற்பிக்கப்பட்டவையே என்பேன்