Saturday 7 July 2012

திசை ஓடி


தூரிகையாக்கப்பட்ட
உன் கால் பெரு விரலால்
வரைந்த ஓவியத்தில்
சொக்கியது என் சிந்தை

இரவு பகல் இரண்டும்
விதியான போது
எமக்கு  மட்டும் இரண்டும்
ஒன்றானதே

அழிவே அழியுதே


முற்றிப் பழுத்தபழம்
மண்ணில் விழுந்த பின்
மரமாய் எழுவதுண்டு
அற்றாங்கே சில
வெம்பி பழமாகி
வீணாய் போவதுண்டு

பகல் மேல் கறுப்படிக்க
நிலை கூடும் மழைமேகம்
சில காலம் தரித்ததில்லை
சிந்தையும் அதுபோல
சில நேரம் அதுவாக
சில தவறை செய்வதுண்டு

Friday 6 July 2012

முன் வந்த முதல் சந்திப்பு


அந்த நிமிடம் வருவதற்கு
இத்தனை தொகையாய் மணித்துளிகளை
வைத்தது யார்

சங்கத் தமிழில் தேடிய வார்த்தைகளில்
காத்தல் என்ற சொல்லை வரிகளில்
எழுதியவர்கள்
உணர மறுத்ததால் தான் என்னவோ
உண்மை என்னை எழுதத் துாண்டியதோ

இரவுகளில்  வானைப் பார்க்காதவன் நான்
இன்று
உன் நினைவுகளால்  நிலவையும் மறந்து
நட்சத்திரங்களை எண்ணி
என் கணித அறிவுற்கு
மீண்டும் ஒரு பள்ளி சென்றேன்

Tuesday 3 July 2012

சுகம்


பட்டாம் பூச்சியின்
வண்ணக் கோலங்களாக
பல நுாறு எண்ணக் கனவுகளுடன்
வாழ்கைக்கு தோண்டப்படும்
அத்திவாரம்
ஆசை எனும் பீடையில்
ஏற்றப்பட்டு
அழகிய எச்சங்களால்

Monday 2 July 2012

சிறகு


மொட்டின் மலர்சியாக
எம் கண்களின்
முதல் சந்திப்பில்
மெளனம் எனும் காலன்
காவு கொண்ட
பொழுதுகளை
எண்ணி ஏங்குகிறேன்

வார்தைகள்
ஈரமற்று
இசைக்கமுடியாத
உன் நாவால்
செய்கையில் விரல்களாள் மட்டும்
சித்திரம் வரைந்ததே