Monday 2 July 2012

சிறகு


மொட்டின் மலர்சியாக
எம் கண்களின்
முதல் சந்திப்பில்
மெளனம் எனும் காலன்
காவு கொண்ட
பொழுதுகளை
எண்ணி ஏங்குகிறேன்

வார்தைகள்
ஈரமற்று
இசைக்கமுடியாத
உன் நாவால்
செய்கையில் விரல்களாள் மட்டும்
சித்திரம் வரைந்ததே


வெட்கத்தால் நீ
முகம் புதைக்க
பத்து நிகக்கண்னும்
பார்வையாய் மாறி
என்னை
சூரிய ஒளி பட்ட
பனிப்பாறயாய்
 உருகச்செத்ததே

நீல வான்
பரப்பில் நிலவுக்கு
என்ன வேலை என்பது போல்
நமக்கிடையில்
காற்றுக்கூட இடஞ்சல் செய்ததே

சொர்கம் சொர்கம்
என்பார்கள்
சுகங்கள் புதைக்கப்பட்ட பூமியில்
வாழத்தெரியாது
வாலிபத்தை தொலைத்தவர்கள்

சிறகுகள் மட்டும் எனக்கு
முளைத்து விட்டால்
பறக்கும் கட்டுப்பாடுகளை மீறி
நாம்
புது தேசமொன்றில்
ஆரம்ப மனிதனாக
ப.பார்தீ

No comments:

Post a Comment