Saturday 7 June 2014

நான் தமிழன்


நான் தமிழன்
என் பெயர் தமிழ்
என் நாடு தமிழீழம்

என்னை
நேற்று இரவுதான்
சுட்டிருக்க வேண்டும்

என் பிணத்தின்மீது
இலையான்கள்
மொய்க்கத் தொடங்கிவிட்டது

அழைப்பு..


அழைப்பு..
எல்லா தேசங்களிலும்
இருக்கும்
அகதிகளே!
உங்கள் 
எல்லாக்
கதைகளையும்
எனக்காக எழுதி அனுப்புங்கள்.

உப்புக் காற்றில்
தூங்கும்
மீனவரே!
ஓய்வாகவிருக்கும்
உங்கள்
வள்ளங்களையும்
வலைகளையும்
எனக்காகப் பொதிசெய்யுங்கள்.

கண்ணீர்


எனக்கு வயது
எழுபது
என்
நண்பர்களில் பலர்
பால்குடி மறக்க வில்லை

ஆச்சரியம் தான்

அவர்களால்தான்
மனிதர்களாக இருக்கமுடிகிறது

அவர்களால்தான் கற்கமுடிகிறது.
மொளனமாகக் கற்பிக்கவும் முடிகின்றது.

அவர்களால் தான்
எதிர்பார்ப்பின்றி சிரிக்கவும்
சிரிக்கவைக்கவும் முடிகின்றது

அவர்கள் என்றும்
பசுமையானவர்கள்
அதனால் தான் என்னவோ
அவர்கள் கண்ணரீ விட்டு அழுகிறார்கள்

வயது அறிவு என்ற
ஒன்ருக்குள் நாம் தொலைத்த
முதல் உணர்வே கண்ணீர்தான்

கண்ணீர் இயலாமையல்ல
இழகியவனின் அணைப்பு

வானத்தைப்போல் பூமியும்
கடலைப்போல் நதியும்
பகலைப்போல் இருளும்
இருந்ததில்லை

அது போல
இயற்பகையின்
பசுமைக்கு ஈரமும்
எண்ணத்தின் பசுமைக்கு
கண்ணீரும் அவசியம்.
ப.பார்தீ

நிலவுக்கு...


நிலவுக்கு...
என் கடிதம்
உன்னை சேரும்போது
யாருக்கும் தெரியாமல்
உன்னை
என்னிடம்
தந்துவிடும்.

காற்று
உன் வீட்டுக்கதவை
தட்டும்போதெல்லாம்
நினைத்துப் பார்
நான்
உன் இதயக்கதவைத் தட்டியதை.

காதல்.


காதல்.
பாதணி அற்றுப்
பாலை நிலத்தில்
நடப்பவனுக்குத்தான் தெரியும்
நிழலின் அருமை

அருமை என்பது
இல்லாமையல்ல
இருந்தும்
இங்கு
வெளிப்படாமை

சினுங்கல்


சினுங்கலின் தூரலின்
இதமான
மெல்லிய காற்று
என்னைத் தொடும்போது
மொளனமாய் வார்த்தைகள்
மனதுக்குள்

ஆங்காங்கே
தூறலின் சாரலில்
நனைத்து சரிந்த மலர்கள்
அவள் பாதத்திற்கு வணக்கம்
செய்கிறது

தூக்கு


தூக்கு
சிலவேளை
அவன்
குற்றப்பத்திரிக்கை
சரியாக விசாரிக்கப்படவில்லையோ?
உண்மையான
குற்றவாளி
அரசியல் புள்ளியோ?
பணக்காரனோ?
அல்லது
வக்கீல்
வலு இல்லாதவனோ?
ஏன் இந்ததீர்ப்பு?

நினைவு


இரவுநேரம்
கதை சொல்லித் 
தூங்கவைக்கும்
பழக்கம் இருந்தது.
காலம் கடந்த
நினைவுகளில்
அது ஒழிந்து
இன்று
நிறயக் கதைகள்
நடக்கவே செய்கின்றது.

உண்டியல்....


உண்டியல்....
ஊருக்குப் போட்டாச்சு
என்றவன்
புன்னகையில் இருந்து
ஒரு கேள்வி

குப்பியர்.....


குப்பியர்.....
இந்தத் தெருப்பக்கம்
நிறையக்
கனவுகளைச்
சுமக்கும்
உயிர்களின் கதை உளது

இயல்


அம்மா.......
காலைப்பொழுதில்
காரிருலை உடைத்துக்கொண்டு
நேரடியாக
பூமியில்விழும்
வெளிச்சம்
கன
அர்த்தங்களை
உணர்த்துகிறது

மகரந்த வாடை


மகரந்த வாடை
கண்களை ஈர்க்கும்
கவி தேசத்தின் புன்னகை
சுதந்திரம் மட்டும்
சிறைப்பட்ட
மகிழ்ச்சி

மே


(மே) மாதம்
மாலுமி அற்று
கரை ஒதுங்கிய 
வெறும்கப்பலில்

அவள்


அவளது விரல்கள்
தானியக்கதிர்கள்
கண்கள் நாவற்பழம்
முகம் காலைப்பொழுது
விரிந்தகூந்தல் காற்றுடன் மேகம்
அவள் சுயேட்சயாக நடந்தாள்
தேர்வின்றி வெற்றிபெற்றாள்
நந்தவனம் கூட்டணி கேட்டது
நான் இருக்கையில்
 ப.பார்தீ

வாழ்கை வாழட்டும்


எப்படியாவது படித்துவிடு
படிப்பதைத் தாண்டியும்
புரிந்து விடு

சில காலங்களில்
சூரியன் மறைவதைக்கூட 
என் மனதால் தாங்க முடியாது

அழகு என்பது
யாவரும் இரசிக்கும் போக்கில்
மாறுபட்ட முறனாகிறது

இன்றும் புதிதாக


மோதி
முட்டுண்டு
மாண் தின்னும்
மானிடநே

கோனின்
முடிக்கொம்பும்

புத்தன்


அத்து மீறிப்பிறந்தது
கவிதை
அம்மணமான பொழுதின்
தாலாட்டாய்

ஆயிரம் கசையடிகள்
தீர்ப்பாகிவிட்டது
ஆதாம் ஏவாள் ஆசையும்
தப்பாகிப்போனது

உயிருக்கு


பூவுக்குப் புரியாது
ஏந்திநின்ற காப்பின் பயன்
நேற்றைக்கு என் நினைவும்
பூவின் ஒப்பனையே

காலத்தின் தூரத்தில்
காட்சி எல்லாம் நினைவாகி
வேதனைக்கு மொழி தேட
அம்மா என்கிறதே