Saturday 7 June 2014

கண்ணீர்


எனக்கு வயது
எழுபது
என்
நண்பர்களில் பலர்
பால்குடி மறக்க வில்லை

ஆச்சரியம் தான்

அவர்களால்தான்
மனிதர்களாக இருக்கமுடிகிறது

அவர்களால்தான் கற்கமுடிகிறது.
மொளனமாகக் கற்பிக்கவும் முடிகின்றது.

அவர்களால் தான்
எதிர்பார்ப்பின்றி சிரிக்கவும்
சிரிக்கவைக்கவும் முடிகின்றது

அவர்கள் என்றும்
பசுமையானவர்கள்
அதனால் தான் என்னவோ
அவர்கள் கண்ணரீ விட்டு அழுகிறார்கள்

வயது அறிவு என்ற
ஒன்ருக்குள் நாம் தொலைத்த
முதல் உணர்வே கண்ணீர்தான்

கண்ணீர் இயலாமையல்ல
இழகியவனின் அணைப்பு

வானத்தைப்போல் பூமியும்
கடலைப்போல் நதியும்
பகலைப்போல் இருளும்
இருந்ததில்லை

அது போல
இயற்பகையின்
பசுமைக்கு ஈரமும்
எண்ணத்தின் பசுமைக்கு
கண்ணீரும் அவசியம்.
ப.பார்தீ

No comments:

Post a Comment