Saturday 7 June 2014

வாழ்கை வாழட்டும்


எப்படியாவது படித்துவிடு
படிப்பதைத் தாண்டியும்
புரிந்து விடு

சில காலங்களில்
சூரியன் மறைவதைக்கூட 
என் மனதால் தாங்க முடியாது

அழகு என்பது
யாவரும் இரசிக்கும் போக்கில்
மாறுபட்ட முறனாகிறது

என் ஜன்னல் வழியே
இதமா மெல்லிய காற்றை சுவாசிக்கும்போது
பிறப்பின் வரத்தை உணமுடிகிறது

ஒருநாள் வாழ்கை என்று அறியாது
மலர்களை அலங்கரித்த வண்ணத்து பூசியில்
வாழ்கையின் வாழ்வை உணமுடிகிறது

தனிமை மனிதர்களைத் தேடும்-இருந்தும்
அமைதிப்படுத்தும் புத்தகங்கள்
அறிஞ்ஞர்களின் சத்திப்பில் ஆழ்திவிடுகிறது

இடஞ்சல் அற்ற இரவு 
நட்சத்திரங்களை எண்ணத்தூண்டும் கனவுகள்
விடியலுக்கும் காத்திருக்கிறது

நான் எப்போதும் வியப்பது
மனிதன் மட்டும் வியப்பான
உயிராக்கப்பட்டதை

படைப்புக்களைவிட கற்பனை
கனதூரம் போய்விட்டது
காலத்தின் புரிதலுக்காய்
ப.பார்தீ

No comments:

Post a Comment