Thursday, 24 October 2013

எனது தாயகம்


என் தாயகம் 
அதுவே எனது தாய்மடி
எனது காதலின் தேசம்
குருதியின் ஓட்டம்
உள்ளக் குமுறல்

அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்ததேசம்
அதிகாரத்தின் சட்டைகளை கிழித்ததேசம்
அகில உலகையும் ஆட்டிய தேசம்

Tuesday, 15 October 2013

அவர்கள்


காலத்தால் சுருங்கியவர்கள்
கதைகளைக்
கேட்க வெறுக்காதீர்

அவர்கள்
நிழலின் பின் தவிக்கும்
ஒளிக்கீற்றுக்கள்

Sunday, 6 October 2013

சாடை


கரையா பொழுதிலே
கவிதையும் வானமும்
நிலவுக்கு முத்தமிட
தாமரையின் மேலமர்ந்து
தாலாட்டுப் பாடிஎழ

மலை ஒன்றின் உச்சியதாய்
நீர் வீழ்ச்சி சல சலத்து
மௌனத் திரை உடைந்து
தாய் மார்பாய்
பால் சுரக்க