Monday 27 August 2012

சுதந்திர தாகம்



அவர்கள் கல்லறைகளில் இருந்து
அதற்கான கருவறைகள்
திறக்கப்படட்டும்

எதிர்கால தேவை உணர்ந்த
விடுதலை விரும்பிகளின்
வார்தைகளில் இருந்து பிறக்கட்டும்

எண்ணப்பட்ட சடலங்களின்
ஏக்கங்களில் இருந்த
பூத்தெழட்டும்

சீரழிக்கப்படும் சேலை 
நுால்களில் இருந்து
நெய்யப்படட்டும்


Sunday 26 August 2012

வாடா மலர் தோட்டம்


நீ பதித்த தடங்களிலே
நினைவு பூத்தெழுக
நின் தூர சுமை மட்டும்
நெஞ்சுடைத்து விம்மி எழ

அங்கோர் மழைக்காலம்
ஆழ் மனது குடை தேட
கீழ் திசையும் மேலாகி
கரு முகிலில் ஆழ்ந்துவிட

காலைக் கரு உடைக்கும்
சேவலினம் தூக்கம் விட
வேலைச் சுமை பருகி
நீந்தும் மானிடர்போல்

Friday 24 August 2012

தவிப்பு



நினைவுச்சுமைகளுடன்
நிலா முகம் காண
நிழலில் கரை பொழுதாய்
அரளி  விதை தேடும்
ஆத்ம காதல்

வலிக்கும் அவன் உள்ளம்
வரைந்த நாளை எண்ணி
துடிக்கும் இதயத்திடம்
சொந்த உயிரும்  கடன்  கேட்கும்

சொர்ப்பனத்தில் எல்லாமாய்
இருந்த பொன் நாட்கள்
அர்ப்ப அமைதியினால்
அகல வாய்திறக்கும்

வித்தகியே இத்தூரம்
போதும் என்றேன்


Monday 20 August 2012

ஒப்பாரிகளின் சங்கமத்தில்



எல்லாப்பிறப்பும் எழும்
யோனித் துவாரதின்
வாசலில் இருந்து

நான்கரைக் கோடியும்
நானே கருவாவேன்
என்பதைப்போல

நீந்தும் உலக வாழ்வில்
நிலைக்காத பிறப்புடன்
போட்டி தொடங்குகிறது

ஆயிரம் யானையிலும்
அதன் பலம் அதுவே உணரும்
என்ற நியதியிலும்

Wednesday 15 August 2012

உடைக்கப்படாத பூவிலங்கு



நாங்கள் வாயை
மூடிக் கொண்டிருந்தால்
இந்தப் பாடலை இசைப்பது யார்

ஆணும் பெண்ணும்
இந்தப் பாடலை இசைப்பதற்காகவே
படைக்கப் பட்டிருக்கிறார்கள்

Saturday 11 August 2012

நீ எனக்குள் நீரானாய்



மனக் குமுறலால்
வாசல் உடைக்கப்பட
கண்களுடன்
அணைக்க முடியாது
தவற விடப்பட்ட என் கருவறைக்கு

பிறப்பையும் இறப்பையும்
சமனாக எண்ணும்
எண்ணத்தை
தனிமையும் பிரிவும்
ஏக்கக் கடலில் ஆழ்த்தி விட்டது