Thursday 29 March 2012

காற்றாகிய அவள்


சுவாசமாக   உணரும்
நின் பாசத்தில்
என் தாயை சுமக்கிறேன்

நீளமாக வளரும்
நின் கூந்தலில்
என் நேரம் உணர்கிறேன்

தாய்மையே சேயாகு


ஒத்த உசுருக்குள்ள
ஒரு உசுரு வந்து நின்று
நத்தை வாழ்கையாய்
நளினங்கள் செய்கிறியே

தொட்டுப் பார்க்கவா
சுகத்தை சுவைக்கவா
தட்டுத் தடுமாறி
தலை கால் தடவவா

உள்ளே இருந்து கொண்டு
ஊமைக்கதை சொல் கிறியே
வில்லாய் வளைந்து
வீரத்தோடு உதைக்கிறியே

Wednesday 28 March 2012

மௌனம்


உடைக்கப்படாத
மெளன மனத்ததால்
ஊமையாகிய அவள்
என்னை தனிமையில் பேசவைத்தாள்


Sunday 25 March 2012

மாயக்காதல்


மலர் போல்
மங்கை ஒப்ப
மன்னனும்
மலரை நோக்க
மதியது

Saturday 24 March 2012

மரணம்


தாய் தந்தை
தங்கை என்றும்
மனைவி பிள்ளை
மக்கள் என்றும்
நேசங் காட்ட விருப்பமில்லை

வானம் பூமி
காற்று என்றும்
நீர் நெருப்பு
அழகு என்றும்
இரசனை கொள்ளத் தெரியவில்லை

காதல் வீரம்
காமம் என்றும்
கோவம் நேசம்
கொள்கை என்றும்
நேர்மை காட்ட தெரியவில்லை

ஆழம் இந்த பூமியிலே
அதிகமான நேர்மையோடு
நேசத்தோடு வந்து உன்னை
பாசத்தோடு பற்றப்போகும்
உண்மை தானே நானுமிங்கே
ப.பார்தீ

Thursday 22 March 2012

அன்புள்ள அம்மாவிற்கு


இரத்த வாடையில்
சுவாசம் தொலைத்த உன்னை
உணராது விட்டாரே

நேற்றுப் புதைத்த
உடலங்களில் நெளிந்த புழுக்களின்
எண்ணிக்கை மறந்தாரே

தோற்றுப் போனார்
என்று எண்ணி
துரும்பாய் நினைக்கிராரே

பூட்டிவைத்த ஏக்கமெல்லாம்
புழுங்கிப் பொரிதல் கண்டு
காற்றில் பறக்கிறதே

நேற்று இன்று நாளை என்று
நித்தம் ஒரு விலையும் பேசி
நீதி சொல்கிறாரே

போற்ற உந்தன் பாதத்திற்கு
பூ மலர் பறிப்பதற்கு
போராட்டம் வேண்டும் அம்மா

போக விடை தாரும் அம்மா
உண்மையான பொய்கள் முன்னே
உம்மை நாமும் மெய்யாக

ப.பார்தீ

Friday 16 March 2012

ஆன்மா


நான் அரன்மனைக்குள்
பிறந்தவனல்ல
அவர்கள் அடக்குமுறையை
உடைக்க வந்தவன்

உவமைகள்  சொல்லி
ஒப்புதல் விளக்கம் சொல்ல
உண்மை அறியாதவர்களா
நீங்கள்

எங்களுக்கான பணி
ஈற்றை எட்டாத
இழுத்தடிக்கும் திட்டங்களுக்குள்
முடங்கிக்கிடக்கின்றது

விதைகள் என்றும்
தனக்குள் மாறி
விருட்சத்தை தோற்று விக்கும்
நான் விதை

சுமையான எங்கள் வாழ்கையில்
சுய புராணம் பாடி
சுயலாபம் தேட
நான் அரசியல்வாதியல்ல

அன்னியன் விந்தில்
அதிக ஆக்குரோசம் பெற்று
உங்கள் கருவறையில்
உங்களால் வளர்கக்கப்பட்டவன்

என்னை அழிக்கும் சக்தி
எமனிடம் அல்ல
நான் உங்கள் கூட்டில் வாழும்
ஆன்மா

ப.பார்தீ

Thursday 15 March 2012

வாலிபம்


விழிகளின் கசிவில்
விழைந்த எம் உறவில்
புதுமைகள் எல்லாம்
பொசுங்கியே போனதே



ஏதும் ஒரு நிலையில்
ஏக்கங்கள் தொடர
வருமொறு அழைப்புக்காய்
வாலிபம் ஏங்குதே



குளிர்பனி கூட
சுடுமென எண்ணி
தனிமையில் உன்னை
சுமக்குதே நெஞ்சு



இனிதொரு பொழுதாய்
விடியலும் எழுப்ப
ஒளிதரும் நிலவே
ஒழிந்தது ஏனோ



நிஐமென எண்ணி
நிழலையும் வியக்குறேன்
நினைவுகள் எல்லாம்
நின் முகம் காட்டுதே



வரிகளில் சொல்ல
வார்தைகளில்லையே
வாலிபம் கசங்கும் முன்
வாழ்கையே ஓடிவா



ப.பார்தீ

Sunday 11 March 2012

இது மறுவாழ்வு


வறண்ட காட்டில்
விழுந்த செந்தணலின்
அகன்ற வாய்க்குள்
விழுந்த பசும் செடியாய்

தேவைகளால் துாண்டப்படும்
உணர்வுகளை
கடிவாளமிடமுடியா  மனங்கள்
ஆசை ஆற்றில் நீந்துகின்றது


Thursday 8 March 2012

திட்டம்


கூட்டித் துடைக்கப்படும்
இறந்த மரக்கிளைகள்
மீண்டும் போடப்படும்
இரசாயனமாக

அழிக்கப்படடும்  இயற்கை
சுவாசமற்ற உயிர்களாக
விஞ்ஞானத்தால்
பொறுவிக்கப்படுகின்றது


Tuesday 6 March 2012

போராளி

மீண்டும் பூக்கும்
எங்கள் தோட்டம்
அதிர்ச்சியில் வேட்டைக்காரன் கண்கள்

வேலிகள் பயிர்களை
நெருங்கின
காவல்காப்பவன்தான் தோட்டக்காரனென புரியாது

எங்கள் தோட்டத்தில் தேன் எடுக்க
வண்டுககள் மொய்க்கின்றன
இனவிருத்தி தெரியாமல்

எங்கள் மகரந்தம்
பரிமாறப்படுகின்றன
நாங்கள் வேறு தோட்டத்திலும் செடியாவோம்

நாங்கள் அழிவில்லாதவர்கள்
எங்கள் பிறப்பு
அழிவிலிருந்தே வந்தது

நாங்கள் போராளிகள்
ப.பார்தீ

நான் கடவுள்


என்னை சிலுவையில் ஏற்றிய பின்
எனக்காக ஆலயம் கட்டப்பட்டது

தேவதுாதன் என்ற திருநாமம் சூட்டப்பட்டு
தீண்டாமை அரங்கேற்றப்பட்டு
மானிடத்திலிருந்து பிரிக்கப்பட்டது

நான் கடவுலல்ல
என்னை கடவுளாக்கி பொய்யாக்காதீர்
நான் மூட நம்பிக்கையை ஒழிக்க வந்தவன்
ஆறாமறிவை தட்டி எழுப்ப வந்தவன்

எதற்கு என்னுருவத்திற்கு
இத்தனை பெரிய ஆர்ப்பரியம்
நான் உங்களிலொருவன்

பிறக்கும் மானிடத்திற்கு உணவு
வாழ்வில் உயர கல்வி
இறக்கும் தருவாயில் அமைதி
கொடுக்கதவறிய நீங்கள்

வணங்குதல் எனும் பெயரால்
மானுடத்தை அவமதிக்காதீர்
நாளைய சந்ததிக்கு
நல்லறிவுக்கு நாத்திகம் போதியுங்கள்

அதில் நானுங்கள் முதல்ச்சீடன்
ப.பார்தீ
06/03/2012

Saturday 3 March 2012

மடல்


உனக்காக வைத்துள்ள
எனதன்பில்
எழுதாத எண்ணற்ற கதை தோன்றும்

சிறகாக பறக்கின்ற
சிந்தைக்குள்
அலையாக வார்த்தைகள் தடுமாறும்


Friday 2 March 2012

போராளி


மீண்டும் பூக்கும்
எங்கள் தோட்டம்
அதிர்ச்சியில் வேட்டைக்காரன் கண்கள்


மீண்டும் பூக்கும் எங்கள் தோட்டம் அதிர்ச்சியில் வேட்டைக்காரன் கண்கள் வேலிகள் பயிர்களை நெருங்கின காவல்காப்பவன்தான் தோட்டக்காரனென புரியாது எங்கள் தோட்டத்தில் தேன் எடுக்க வண்டுககள் மொய்க்கின்றன இனவிருத்தி தெரியாமல் எங்கள் மகரந்தம் பரிமாறப்படுகின்றன நாங்கள் வேறு தோட்டத்திலும் செடியாவோம் நாங்கள் அழிவில்லாதவர்கள் எங்கள் பிறப்பு அழிவிலிருந்தே வந்தது நாங்கள் போராளிகள் ப.பார்தீ

மீண்டும் பூக்கும்
எங்கள் தோட்டம்
அதிர்ச்சியில் வேட்டைக்காரன் கண்கள்

வேலிகள் பயிர்களை
நெருங்கின
காவல்காப்பவன்தான் தோட்டக்காரனென புரியாது

எங்கள் தோட்டத்தில் தேன் எடுக்க
வண்டுககள் மொய்க்கின்றன
இனவிருத்தி தெரியாமல்

எங்கள் மகரந்தம்
பரிமாறப்படுகின்றன
நாங்கள் வேறு தோட்டத்திலும் செடியாவோம்

நாங்கள் அழிவில்லாதவர்கள்
எங்கள் பிறப்பு
அழிவிலிருந்தே வந்தது

நாங்கள் போராளிகள்
ப.பார்தீ

வர்கள் எங்கள் பிறப்பு அழிவிலிருந்தே வந்தது நாங்கள் போராளிகள் ப.பார்தீ

மீண்டும் பூக்கும்
எங்கள் தோட்டம்
அதிர்ச்சியில் வேட்டைக்காரன் கண்கள்

வேலிகள் பயிர்களை
நெருங்கின
காவல்காப்பவன்தான் தோட்டக்காரனென புரியாது

எங்கள் தோட்டத்தில் தேன் எடுக்க
வண்டுககள் மொய்க்கின்றன
இனவிருத்தி தெரியாமல்

எங்கள் மகரந்தம்
பரிமாறப்படுகின்றன
நாங்கள் வேறு தோட்டத்திலும் செடியாவோம்

நாங்கள் அழிவில்லாதவர்கள்
எங்கள் பிறப்பு
அழிவிலிருந்தே வந்தது

நாங்கள் போராளிகள்
ப.பார்தீ