Thursday 5 December 2013

அலங்காரம்


அவளை சந்திக்க முடியாத இரவு
அவனுக்கு வேதனையானது

அந்த இரவு அவனுக்கு
நீண்டு கொண்டே போனது

நட்சதிரம் நிலவொளி எல்லாம்
இருண்ட கண்டமானது

விளக்கு


உளைத்துக் களைத்து ஓய்வுக்குச் செல்கிறான் சூரியன்
அதன் தடிப்பில் மெளப்பொழுதின் இரசனைகளைக் காவிக்கொண்டு தொன்றலும் தீண்டத்தொடங்கியது
அப்போதுதான் அவள் வருகை

பூவே வெட்கமா?


மலர்கலே மன்னித்து விடுங்கள்
உங்களை பறித்து
என் காதலிக்கு பரிசளிக்க விரும்பவில்லை

நாளை அழியும் நீங்கள்
அவளின் பிரிவைத் தாங்க மாட்டீர்கள்

உயிருக்கு


பூவுக்குப் புரியாது
ஏந்திநின்ற காப்பின் பயன்
நேற்றைக்கு என் நினைவும்
பூவின் ஒப்பனையே

புதைகுழி இராகம்



இதோ 
எங்கள் கைகளில்
கொதிநீரும்
சீழும் உள்ளது 
இதை 
அவர்கள் சுவைக்கட்டும்