Thursday 5 December 2013

அலங்காரம்


அவளை சந்திக்க முடியாத இரவு
அவனுக்கு வேதனையானது

அந்த இரவு அவனுக்கு
நீண்டு கொண்டே போனது

நட்சதிரம் நிலவொளி எல்லாம்
இருண்ட கண்டமானது


அவள் எண்ணங்கள் மட்டும்
அவனுக்குள் புதைந்திருந்தது

முறன் நிறைந்த உலகு
மரத்திற்கு ஒப்பானது

இரவை நேசிக்கத் தெரிந்தால்தான்
பகலுக்கு வெற்றி

துன்பத்தை துடைக்கத் தெரிந்தால்தான்
இன்பத்திற்கு வெற்றி

அவள் எண்ணமும்
அவனுக்குள் இன்பமானது

காத்திருப்பது அவன் குணம்
காக்கவைப்பது அவளுக்கு சுகம்

அவன் காதல் அவனுக்குள் வலித்தது
அவன் கண்கள் கண்ணீரை இரசித்தது

இந்த இரவு புனிதமானது
அவன் வலிகளும் சுகத்தைக்கண்டது
ப.பார்தீ

No comments:

Post a Comment