Thursday 5 December 2013

விளக்கு


உளைத்துக் களைத்து ஓய்வுக்குச் செல்கிறான் சூரியன்
அதன் தடிப்பில் மெளப்பொழுதின் இரசனைகளைக் காவிக்கொண்டு தொன்றலும் தீண்டத்தொடங்கியது
அப்போதுதான் அவள் வருகை


இதமான இந்த பொழுதில் இயற்கையின் அழகயே மாய்த்து
புன்னகையை கடமையின் உச்சமாய்
பார்வையை ஏக்கத்தின் வெறுப்பாய்
வரவேற்கும் வருமையின் உள்ளம்

காயப்பட்டுக் காயப்பட்டு வலிகளும் வலிகண்டு
வயிற்றுக்கு மட்டும் உணர்த்தமுடியாத தேவை
இவளையும்தீண்டியதில்
தவரொன்ரு இருப்பதாகத் தெரியவில்லை

அவளின் வருகை
எத்தனைபேரின் எதிர்பார்ப்பு
எத்தனை பேரின் திருமுளுக்கு எத்தனை பேரின் சொர்க்கம்
ஆண்மை என்பது ஆண்குறியின் இயக்கம் என்று ஏண்ணித்தாநோ இந்தச்செலவு

சுகாதாரம் ஏயிட்ஸ் உயிர்கொள்ளி நோயாம்
மறுபுறம் பாதுகாப்பான உடல் உறவுக்கு ஆணுறையாம்
குடும்பக் கட்டுபாட்டிற்கும் இது விதிவிலக்கல்ல
இங்கு தேவை ஒழுத்தத்தை கொண்றது

பொழுதும் இருளைக் கவ்வுகிறது
அவள் தூக்கம் பொழுதைக் கவ்வியது
இருந்தும் சதைக்கும் இரத்தத்திற்கும் நடுவில்
அவள் மனது இன்னும் விலைபோகவில்லை
ப.பார்தீ

No comments:

Post a Comment