Tuesday 30 April 2013

மேகம் கொண்ற பொழுது

எனக்கொரு முகவரி தேடி
இரவினைப் புரவிகளாக்கி
சாட்டையில் புறத்தினை தோய்து
தனிமையில் சொர்ப்பணம் கொண் (ஆள்)



இருதயம் துடித்திடும் போது
என் கணம் நீண்டிடும்போது
விடத்துடன் நாகத்தை தேடி
விடை கொடு உடலிம் உயிரே

Tuesday 23 April 2013

ஊர்




ஆடி மழை பெய்திருக்கு
தேடிப் புல் முழைத்திருக்கு
ஏரு மேலே சேறு பூச
எங்கிருக்கான் விவசாயி

கட்கடங்கள் நிறையூரில்
கணணிக்குள்லே உறவுதேடி
காலத்தைத் தவறவிட்டு
கலங்க போரான் விவசாயி


எத்திசை ஈர்ப்பு


டிக் டிக் டிக்
காலக் கனி இதழில்
தேன் கழிக்க அளி
தூக்கத் தொலைதலினை
காத்தல் ஆக்கியதே

விண் கருக்கலுர
வன் புனர்ச்சி கொழும்
கண் மறுத்த வளி
தன் உணர்ச்சி புக -சித்தம்
கலங்கியதே

Friday 12 April 2013

ஆராரோ ஆரிவரோ



ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ

நீர் ஆளும் பூமியிலே  வந்துதித்த நித்திலமே
நீல வான் வெளியில் ஓளி கொடுக்கும் சூரியனே

அழகோவியம்


ஒரு அழகோவியம் உயிரானதே
அதன் பார்வையில் என் உயிர் போகுதோ
இது நாள்வரை தவம் செய்ததை
இமை கொண்றதே இதுதான்விதி

வலி என்பதா சுகம் என்பதா
தெலைதூரத்தில் உந்தன் குரல்
கரைகின்றதே காதல்மனம்
முகம்பார்க்கவா உயிர் நோகிறேன்

வரும் காற்றிலே உன்வாசனை
எடுத்தே அன்பே உயிர்வாழ்கிறேன்
தவம் செய்கிறேன் எனைக் கானவே
எழில் கொஞ்சுதே உந்தன்முகம்

மலர் பாதத்தால் மண் தொட்டதால்
பூ-வனம்மானதே பாலைவனம்
நிழல் கொள்ள நான் திரியாகிறேன்
இது போதுமே உயிர்வாழுமே
ப.பார்தீ

எங்கள் மரணங்கள்


அவர்கள் முகங்கள் கிழிந்து
சாட்சிகள் போராளியாக்கப்படும்போது 
அதன் 
பூகம்பத்தில் இருந்து
புதிய தேசத்தின் பரிநாமம் பிறப்பொடுக்கும்


விழிப்பு


உலகில் ஒரு புது விழிப்பு
தூக்கக் கலக்கத்தை போக்குவதான விழிப்பு
செலவின் எச்சங்களுக்கு 
இலாபத்தின் சேர்க்கையின் விழிப்பு

முன்பு பசுமையாக இருந்த வயல்கலும்
வைகரைப்பொழுதின்
வரவைக் கொண்டாடிய சோலைகலும்