Friday 12 April 2013

ஆராரோ ஆரிவரோ



ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ

நீர் ஆளும் பூமியிலே  வந்துதித்த நித்திலமே
நீல வான் வெளியில் ஓளி கொடுக்கும் சூரியனே


அன்பு முகம்தேடி அணைக்க வந்த ஆருயிரே
வண்டு முகம்தேடும் மகரந்தப் பூ இதழே 

கற்பனையில் நான் காணும் கழிதனை தீர்க்கவந்த
காவியத்தில் பேர்சொல்லும் தமிழ் அரசே

சிரு வாய் மலர்ந்தருளி செல்வமே பால் குடித்தாய்
சித்திரமே செங்கோள் பேரரசே கண்மணியே நீ உறங்கு 

நீதிக்குப் போர் எடுத்து சாதிக்கு கொள்ளியிடு
மூடப் பழக்கத்தை மொட்டோடு கிள்ளி எறி

பாட்டி கதை பாட்டன் கதை கேட்டதோடு நி்ன்றிடாமல்
கேள்வியால் கனைதொடுத்து ஞானத்தை பெரிக்கிவிடு

அடித்தார் யாருமுண்டோ ஆக்கினைகள் செய்தாரை 
தடுத்து நீ நின்றால் தலைமகனே மேல் எழுவாய்

உடுக்குச்சத்தமும் ஒப்பாரி ஓசையும் எதற்கு பூமியிலே
விழித்து நீ எழுந்து விஞ்ஞானம் கற்றறிவாய்

தங்கத்தில் தொ ட்டிசெய்தும் தாய்சேலை ஏனைகட்டீ
ஏற்றத்தாழ்வோடு இங்கு வாழ்கின்றார் ஏன் என்ற கேள்வியோடு என் மகனே கண்வளராய்

மாற்றார் போல தாம் வாழ நினைத்திங்கு
சொந்த விருப்பங்களை சுந்தரமே கொள்ளிவைப்பார்

போராடி போராடி தேர்ந்தாலும் உன்கையை
நீட்டாதே பிறர்முன்னே  நாற்றம் எடுத்திடுவாய்

நாவிலே உண்மை சொல்லு வார்தையில் உறுதிகொள்ளு
நம்பிக்கை உந்தன்மீது நன்றே வைத்து விடு

கோனே குலக்கொடியே கொள்கையேடு வாழ்திடப்பா
தாய்நாடும் தாய்மொழியும் உயிராய் கொண்டிடப்பா

எல்லையில்லா இவ்வுலகில் எனக்கு நீ பிறந்திட்டாய்
தொல்லை அறியாத நல்ல மனிதனாகு

ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ப.பார்தீ

No comments:

Post a Comment