Friday, 12 April 2013

அழகோவியம்


ஒரு அழகோவியம் உயிரானதே
அதன் பார்வையில் என் உயிர் போகுதோ
இது நாள்வரை தவம் செய்ததை
இமை கொண்றதே இதுதான்விதி

வலி என்பதா சுகம் என்பதா
தெலைதூரத்தில் உந்தன் குரல்
கரைகின்றதே காதல்மனம்
முகம்பார்க்கவா உயிர் நோகிறேன்

வரும் காற்றிலே உன்வாசனை
எடுத்தே அன்பே உயிர்வாழ்கிறேன்
தவம் செய்கிறேன் எனைக் கானவே
எழில் கொஞ்சுதே உந்தன்முகம்

மலர் பாதத்தால் மண் தொட்டதால்
பூ-வனம்மானதே பாலைவனம்
நிழல் கொள்ள நான் திரியாகிறேன்
இது போதுமே உயிர்வாழுமே
ப.பார்தீ

No comments:

Post a Comment