Tuesday 23 April 2013

ஊர்




ஆடி மழை பெய்திருக்கு
தேடிப் புல் முழைத்திருக்கு
ஏரு மேலே சேறு பூச
எங்கிருக்கான் விவசாயி

கட்கடங்கள் நிறையூரில்
கணணிக்குள்லே உறவுதேடி
காலத்தைத் தவறவிட்டு
கலங்க போரான் விவசாயி


முப்போகம் விளைஞ்சபூமி
முட்காட்டுள் புதைந்திருக்கு
வற்றாத குளம்எல்லாம்
மைதானம் ஆகிருக்கு

உணவுச் சங்கிலிக்கு
ஒப்பாரி வந்திருக்கு
வறுமைக்கு விடை கொடுக்க
இலவசம் பிறந்திருக்கு

பணக்காரச் சந்தையினால்
பட்பணத்தில் கூடிவிட்டோம்
பழஞ்சோத்து வாசனையும்
குழிர்ப்பெட்டி பறிச்சிட்டுது

மாமரக் கொம்புடைஞ்சு 
ஊஞ்சாலும் போய்விட்டது
அணில்கடிக்த கொய்யாவும்
யாருமற்று காத்திருக்கு

மாரில் வந்த தாய்ப்பாலும்
சூப்பிக்குள்ள போயிருக்கு
கண்ணாலே பேசும்காதல்
கைபேசி பறிச்சிட்டுது

என்ன நகரவாழ்கை
தூக்கத்த பறிச்சிட்டுது
தொலைந்த ஊர் நினைவை
தொலையாய் இவ்வுலகே
ப.பார்தீ 

No comments:

Post a Comment