Monday 27 February 2012

பிறப்பு


என் கல்லறையின்
கதவு திறக்கப்பட்டு விட்டன
என்னை வரவேற்பதற்காக
மலர்த் தோட்டங்கள் வாடி நிற்கின்றன

உரிமையில்லாத உலகில்
உரிமைக்காக
உயிர்கள்
தன்னை அழித்துக்கொள்கின்றன


Saturday 25 February 2012

என் காதலி


நயவஞ்சகமாக சூரையாடப்பட்ட
என் காதலி
கைவிடப்பட்டிருக்கிறாள்

தேசங்கள் என்ற பின்னனியில்
அவள் சேலைகள் கவரப்பட்டு
அம்மணமாகத் தவிக்கின்றாள்


Tuesday 21 February 2012

சொந்தம்


நான் தனியாக
உணர்ந்ததில்லை
தனிமையை

எனக்குள் என் பரம்பரைகள்
சே ஆக மார்க்ஸ் ஆக
என் தேசியத் தலைவராக(மேதகு வே.பிரபாகரன்)

Sunday 19 February 2012

நாளை



பழமெனும் நிலையில்
மாற்றம் காணும்
முற்றிய விதைகள்
மீண்டும் எழும் விருட்சமாய்

இயக்கவியலின்
இருபக்கங்களையுணராத உலகு
தோல்வியைப் புதிய வெற்றியின்
தொடக்கமாகக் கொள்வதில்லை


Friday 17 February 2012

இனியும் வேண்டாம்


நம்பிக்கை எனும் அச்சாணியில்
உண்மைச் சக்கரம்
சுழல விடப்பட்ட நாள்
விவாதங்களுடன் தொடக்கம்

இதயத்துடிப்பு
மழையுடன் கூடிய இடியாக
மனம் எனும் நிழலின் துண்டலால்
மார்பைப் பிழந்தது


Tuesday 14 February 2012

புழுங்கும் மானிடம்


கருவிகள் கையாலத் தொடங்கியவன்
உணர்வுகளை தொலைத்து விட்டானோ?

உண்மை ?
இயந்திரம் காலத்தை சுருக்கியதா ?
கண்டு பிடித்தவனை  இயந்திரமாக்கியதா ?


Sunday 12 February 2012

?


மண்டியிட்டவர்கள்
நிமிர வைப்பதாகச் சொல்கிறார்கள்

பிச்சை எடுத்தவர்கள்
தருமம் தருவதாவதாகச் செல்கிறார்கள்

காட்டிக் கொடுத்தவர்கள்
காப்போம் என்கிறார்கள்

குறுக்கு வழியில் வந்தோர்
நேர் வழியை துாற்றுகிறார்கள்

ஆடுகளம் இல்லாதோர்
அணியில் சேரத் துடிக்கிறார்கள்

கண்களை மூடி விட்டு
சூரியனைத் தேடுகிறார்கள்

அவர்கள் போராட மனமில்லாதவர்கள்
விடுதலை பற்றி பேசுகிறார்கள்
ப.பார்தீ

Thursday 9 February 2012

நசுக்கப்படட்டும்


எம் கனவுகள்
பாதியில் கலைக்கப்பட்டு விட்டது

வலிகளின் ஏக்கங்களுடன்
வாழ்கை நீழ்கின்றது


Friday 3 February 2012

நமக்காக


விசிரியின் காற்றை
அனுபவிக்க முடியாமல் முகங்கள்
செங்குருதியால் தீட்டப்பட்ட
எல்லைக் கோட்டுக்குள்

வாழ்ந்த மாவீரர்களின்
எண்ணங்கள்