Friday 3 February 2012

நமக்காக


விசிரியின் காற்றை
அனுபவிக்க முடியாமல் முகங்கள்
செங்குருதியால் தீட்டப்பட்ட
எல்லைக் கோட்டுக்குள்

வாழ்ந்த மாவீரர்களின்
எண்ணங்கள்

வாழும் அரசியலால்
விலை பேசப்படுகின்றது

முற்றும் என்று
முடிக்கப்பட்ட களங்கள்
திறக்கப்படுகின்றன
முதலாளித்துவம் எனும் சாக்கடையால்

அன்று விறைத்த மனங்கள்
 கரையும் கண்ணீர்
கடலையும் வியப்பில் அழ்த்தியது

கட்டளை எனும் வேதம்
காலத்தில் மறைந்து கிடந்த
உண்மைகளுக்கு
உயிர் கொடுக்கின்றன

எத்தைனை இழப்புக்கள் வந்தாளும்
இனணயச் சொல்கிறது
இது நமக்கானதே
ப.பார்தீ

No comments:

Post a Comment