Tuesday, 21 February 2012

சொந்தம்


நான் தனியாக
உணர்ந்ததில்லை
தனிமையை

எனக்குள் என் பரம்பரைகள்
சே ஆக மார்க்ஸ் ஆக
என் தேசியத் தலைவராக(மேதகு வே.பிரபாகரன்)

ஏன் ஹட்லருமாகக் கூட

அன்னியமானவர்களும்
தொடர்புகளால் சொந்தமாகின்றார்கள்

எதிரிகள்
என்றும் என் சொந்தம்

பிரிவுகள்  எனக்கில்லை
பிணைப்பான சமூகம் உள்ளவரை

துரவியாக எண்ணுகிறேன்
துறக்க நினைக்காத மானுடத்திற்காய்

என்றும் பசியோடு
உண்ணமுடியாத மானிட பழக்கம் உள்ள வரை

நான் விழுந்து விட்டேன்
சமூகச் சமுத்திரத்தில்

உன்னை வீழ்த்தும் வரை
நான் உன் எதிரி
ப.பார்தீ

No comments:

Post a Comment