Saturday, 25 February 2012

என் காதலி


நயவஞ்சகமாக சூரையாடப்பட்ட
என் காதலி
கைவிடப்பட்டிருக்கிறாள்

தேசங்கள் என்ற பின்னனியில்
அவள் சேலைகள் கவரப்பட்டு
அம்மணமாகத் தவிக்கின்றாள்


நாளை நாளை என்ற
இழுத்தடிப்பில்
நாசமாக்கப்பட்ட அவள்

தன் பிள்ளைகள் புதைந்த
நிலத்தில் வளரும் செடிகளுக்கு
வீரம் சொல்லிக் கொடுக்கின்றாள்

என்றோ ஒருநாள்
பிள்ளைகள் வருவார் என்று
ஏக்கத்தில் வானத்தை பார்க்கின்றாள்

வாலிபம் சாகும் முன்
வருகைகள் உறுதியாகும்
வாழ்க்கையும் கையில் சேரும்

நித்தம் அவள் நினைவால்
செத்துப் பிழைக்கும் உயிரை
ஒத்தவரி சொல்லாதே

உயிரே வருவேன்
ப.பார்தீ

No comments:

Post a Comment