Sunday, 19 February 2012

நாளை



பழமெனும் நிலையில்
மாற்றம் காணும்
முற்றிய விதைகள்
மீண்டும் எழும் விருட்சமாய்

இயக்கவியலின்
இருபக்கங்களையுணராத உலகு
தோல்வியைப் புதிய வெற்றியின்
தொடக்கமாகக் கொள்வதில்லை


தீயைத் தீண்டி விலகிய கரங்கள்
வெப்பத்தைப் பகைப்பது
சூறாவளிக்கஞ்சி
சுவாசத்தை மறுப்பதுக்கொப்பாகும்

அனுபவங்கள் சிறந்த ஆசான்
இழந்தவை புதிய தெரிவை
ஆரோகியமானதாக்கும்

பயணப்பாதை
எல்லையற்ற வாழ்க்கையில்
ஒன்றின் முடிவில்
பிறிதொன்றைத் தோற்றுவிக்கும்

நாளையென்பது என்றும்
கேள்விக்குறி
இன்றைய பொழுதை
சரியாக செயற்படுத்தாதவரை
ப.பார்தீ

No comments:

Post a Comment