Friday 12 April 2013

விழிப்பு


உலகில் ஒரு புது விழிப்பு
தூக்கக் கலக்கத்தை போக்குவதான விழிப்பு
செலவின் எச்சங்களுக்கு 
இலாபத்தின் சேர்க்கையின் விழிப்பு

முன்பு பசுமையாக இருந்த வயல்கலும்
வைகரைப்பொழுதின்
வரவைக் கொண்டாடிய சோலைகலும்

கலாச்சாரம் பாரம்பரியம்
போற்றப்பட்ட ஊர்கள்
அழிக்கப்பட்ட  பின்னரான விழிப்பு

விழிப்போ 
காலத்தோடு நடைபோடத்தூண்டுகின்றது
காலமோ
அழிவுக்கு அத்திவாரம் தோண்டிவிட்டு
கூரையிலா வானத்தைக் கான்கிறது

இங்கு இரண்டு மனிதர்கள்
ஒன்று 
இறந்தவன்
இரண்டு
எதிர்காலத்தை தேடுபவன்
தேடுபவன் பிடிக்க நினைப்பதோ
காலத்தின் விழிப்பில்
கரைந்த உண்மையை
ப.பார்தீ

No comments:

Post a Comment