Saturday 7 June 2014

உயிருக்கு


பூவுக்குப் புரியாது
ஏந்திநின்ற காப்பின் பயன்
நேற்றைக்கு என் நினைவும்
பூவின் ஒப்பனையே

காலத்தின் தூரத்தில்
காட்சி எல்லாம் நினைவாகி
வேதனைக்கு மொழி தேட
அம்மா என்கிறதே


யார் அருகும்திருப்தி இல்லை
நீ இருக்கும் தூரத்தினால்
எல்லா வேதனையும்
என் விழிகள் தாங்கவில்லை

கல்லான நெஞ்சமும்
கடும்வலிக்கு தாய்தேடும்
புல்மேல் பனித்துளியாய்
உள்ளம் சாய்ந்து அழும்

மனம்விட்டு பழகுதற்கும்
சினம் கொண்டு சீறுதற்கும்
நாள் வருமா என் தாயே
நான் தவழ்ந்த நிலம்காண

 ப.பார்தீ

No comments:

Post a Comment