Saturday 7 June 2014

குப்பியர்.....


குப்பியர்.....
இந்தத் தெருப்பக்கம்
நிறையக்
கனவுகளைச்
சுமக்கும்
உயிர்களின் கதை உளது

அவர்கள்
வாழ்க்கை சற்றே
வித்தியாசமானது
புன்னகை
செய்யும்போது
பேசும்போது
கைலாகு செய்யும்போது
வலிகளே
எச்சத்தில்
நிறைந்திருக்கும்

காது கொடுத்தால்
கன
சட்டவாதிகள்
தத்துவஞானிகள்
வேலை விண்ணர்கள்
என்று ஒரு
பட்டியல் போடலாம்
வீதிக்கரையில்

அவர்களுகென்று
குடும்பம்
இயங்கும்
இவர்கள் நித்திரயும்
நிசி சோறும்
பரிமாற்றம் இல்லாது
மேசையில்
மூடிகிடக்கும்

விடியும் போதும்
உறவுகளின் சத்தம்
அணுகுண்டாய் காதில் விழும்
அதட்டலில்
அதுவும்
அடங்கி விடும்

கஸ்ரம் ஒருபக்கம்
கதை பேசாக்
காதலியின்
முத்தமும்
களவு போகும்
அளவிற்கு
தனிமையாகும்
இவர் வாழ்கை

இவர்கள் தான்
குப்பியர் விண்ணர்கள்
ப.பார்தீ

குப்பியர் என்ற பதம் புலம்பெயர்த்து பிரான்ஸ் நாடில் வசிக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களும் அறிந்ததே.இருந்தும் அந்த பதத்தின் விளக்கம்(இங்கு எட்டி மணி நேர வேலையை இரண்டாகப் பிரித்து 4மணித்தியாலம் முதலும் மீதி 4 மணித்தியாலத்தை 4மணித்தியால இடை வேளையின் பின் செய்தல்.இடை வேளை 4மணியும் வீதியிலோ வெளி இடத்திலோ பொழுது கழியும் ) ஒரு வாழ்கை. விடிய 9க்கு வீடால இறங்கினா இரவு 1க்கு வீட்ட வரு வீனம்

No comments:

Post a Comment