Saturday 7 June 2014

காதல்.


காதல்.
பாதணி அற்றுப்
பாலை நிலத்தில்
நடப்பவனுக்குத்தான் தெரியும்
நிழலின் அருமை

அருமை என்பது
இல்லாமையல்ல
இருந்தும்
இங்கு
வெளிப்படாமை

சமுதாயம்
வாழ்வையும் காதலையும் வேறாக்கி
காதலின் கதவுகளை
அடைத்து விட்டு
வாழ்வின் சுகத்தை
முகட்டின் வழியால் தேடுகிறது

தேடுதல் கூட
இருந்ததை
தொலைத்ததன்
வெளிப்பாடே

ஓரங்கட்டப்படும்
ஒழுக்கங்களின் வயது
காலத்தை தாண்டும்போது
களவாடப்படும்
ஆனால்
காலத்தால் வென்றுவிடும்

வெற்றி அடையும்போது
நிறையப்
புன்னகைகள்
கண்ணீரில் மிதக்கும்

ஆதலால்
ஈர்ப்பின் நோக்கம்
இருப்பின் தன்மை
வெளிப்பாடின் தெளிவு
பட்டத்தின் முச்சையாக
சமாந்தரப்பட்டால்
வானை எட்டிவிடும் காதலின் வாழ்க்கை
ப.பார்தீ

No comments:

Post a Comment