Saturday 7 June 2014

தூக்கு


தூக்கு
சிலவேளை
அவன்
குற்றப்பத்திரிக்கை
சரியாக விசாரிக்கப்படவில்லையோ?
உண்மையான
குற்றவாளி
அரசியல் புள்ளியோ?
பணக்காரனோ?
அல்லது
வக்கீல்
வலு இல்லாதவனோ?
ஏன் இந்ததீர்ப்பு?

மரணத்தின்
எல்லைவரை
வாழ்கையை
அழுத்தமாக்கிவிட்டு
பணம்
பஞ்சம்
என்ற இரண்டு
தேசங்களை உருவாக்கிவிட்டு
வாழ் என்கிறது.
சட்டங்கள்

படிப்பு
பண்பாடு
கலாச்சாரம்
மொழி
இனம்
நிறம்
என்பன ஒருவகைப் போதை ஏத்தி
மனிதனை
மனிதனிடம்
தேடவைத்துவிட்டது.

தன்னைத்
தானே
பெறுவித்து
தனக்கான
வரைமுறைக்குள்
வாழ்ந்து முடிக்கும்
மற்றைய உயிர்கள்
மனிதனில்
ஒருபடி மேலே

இங்கு எல்லாம்
ஆக்கப்பட்டது
அனுபவிப்பதற்காக
அனால்
அதன் எல்லைகள்
வரையரைக்குள்
புதைப்பட
வாழ்கை
களவு செய்
பொய் சொல்
பொறாமைப்படு
கொலை செய்
கட்டுப்படுத்து
கற்பளி
எனத்
தூண்டிவிட

தூக்கு
உயிருக்கா?
இல்லை
உயிரைக் காவும்
உடம்புக்கா?
ப.பார்தீ

No comments:

Post a Comment