மோதி
முட்டுண்டு
மாண் தின்னும்
மானிடநே
கோனின்
முடிக்கொம்பும்
கொப்பழிக்கும்
நடை பயிலும்
குப்பன்
கொடிமலரும்
ஆதியில் பர்த்ததில்லை
அன்பு வார்த்தை
பேச வில்லை
நீல
வான் நெடுகும்
நிலவைத் தேடவில்லை
ஊடல் வந்ததில்லை
ஒப்பிக்கும் சண்டை
இல்லை
போட்டிக் குதர்க்கத்தில்
போரடி நின்றதில்லை
ஆனாலும்
ஓர் உண்மை
அப்பன் அம்மை
செய்து வைத்த
அன்பு
கடத்தலுற்று
அவன் எண்ணம்
அவள் எண்ண
அவள் எண்ணம்
அவன் எண்ண
புதிதாய்
பூத்தது
பளைய செடிஒன்று
ப.பார்தீ
February 14, 2014

No comments:
Post a Comment