Saturday 7 June 2014

நினைவு


இரவுநேரம்
கதை சொல்லித் 
தூங்கவைக்கும்
பழக்கம் இருந்தது.
காலம் கடந்த
நினைவுகளில்
அது ஒழிந்து
இன்று
நிறயக் கதைகள்
நடக்கவே செய்கின்றது.


இந்த நிமிடம்
ஒருவன் இறந்திருக்கலாம்
ஒருவன் பிறந்திருக்கலாம்
ஒருவன் பசித்திருக்கலாம்
ஒருவன் படித்திருக்கலாம்

நியாயமாக நாணயத்திற்கு
இரண்டு பக்கங்கள்
இருந்துதானே ஆகவேண்டும்
சுழர்ச்சியின் வேகம்
யதார்த்ததை மீறி
தீர்புச்சொல்லலாமா?

பூமிக்குளம்பு
காற்றை முத்தமிடும்பேது
பாறைகளின் பிறப்பில்
புதிய மலைகள்
பிறந்துதானே ஆகவேண்டும்
அந்த நாள்
வலிகளின்
கண்ணீரும்
கல்வீச்சாய் மாறும் கதைகளில்
கவலைகள் தொலையட்டும்
உறவுகளே
ப.பார்தீ
19/05/2014

No comments:

Post a Comment