Saturday 7 June 2014

புத்தன்


அத்து மீறிப்பிறந்தது
கவிதை
அம்மணமான பொழுதின்
தாலாட்டாய்

ஆயிரம் கசையடிகள்
தீர்ப்பாகிவிட்டது
ஆதாம் ஏவாள் ஆசையும்
தப்பாகிப்போனது


ஆலையங்களின் பெருக்கம்
அடைபட்ட சாக்கடையாய்
ஊர் முழுக்க நாறிக்கிடக்கிறது
கடவுளின் சக்தியால்

முதியேர் இல்லங்களின்
அனுமதி கிடைக்காத அளவிற்கு
பிள்ளைகளின் வளர்ச்சி
பெருகி விட்டது

மன்னராட்சி முற்றுப்பெற்று
மக்கள் ஆட்சி
சர்வதிகாரத்தில்
சுதந்திரம் கண்டது

எல்லாப் போராட்டமும்
சுதந்திரம் விடுதலை
என்னும் தொனியில்
சிறைகளில் வாழ்கிறது

கிராமங்கள் 
நகரங்களின் கேலியாகி
நாகரிகம் கற்பிக்கிறது
நகரத்திற்கு

பண்டமாற்று 
பணமாகி -பணம்
பண்டங்களை விழுங்கி
பசியாகியது உலகு
ப.பார்தீ

No comments:

Post a Comment