Saturday 7 June 2014

சினுங்கல்


சினுங்கலின் தூரலின்
இதமான
மெல்லிய காற்று
என்னைத் தொடும்போது
மொளனமாய் வார்த்தைகள்
மனதுக்குள்

ஆங்காங்கே
தூறலின் சாரலில்
நனைத்து சரிந்த மலர்கள்
அவள் பாதத்திற்கு வணக்கம்
செய்கிறது

பேசாமல் உரசிக்கொண்டே
பாசத்தை உணர்த்தும்
இலைகள், தெடுகையில்
இருத்தலின்
உண்மையை ஒளிக்கின்றது

இன்னும் பூமியை
முழுதாக நனைக்காத தூறல்.
மேகக் கருக்கலை பிழந்துவரும்
ஒளிகீற்று, யாவும்
சாதி பேதமற்றுக் கலந்து துடிக்கின்றது

இயற்கையும் உணர்வும்
இரண்டறக்கலக்க
காதலின் முத்தத்தில்
யாவும் புதுமையே
ப.பார்தீ

No comments:

Post a Comment