Saturday 7 June 2014

மே


(மே) மாதம்
மாலுமி அற்று
கரை ஒதுங்கிய 
வெறும்கப்பலில்

விமானங்களும்
வாகனங்களும்
மோதிக்கொண்டது.
அதன் பகுதிகள்,
கூறு போடப்பட்டது.
கொஞ்சம் எரிக்கப்பட்டது
கொஞ்சம் புதைக்கப்பட்டது
கொஞ்சம் உறுமாற்றப்பட்டது
அதன் உண்மைகள்
அரசியல் விலைக்கு
அடகுவைக்கப்படது
அதன்
கட்டமுடியாத
வட்டிப்பெருக்கில்
எங்கள் கப்பல்
நீந்திய கடலில்
நாங்கள் பயணிப்போம்
மாலுமியோடு
ப.பார்தீ

No comments:

Post a Comment