Sunday 11 March 2012

இது மறுவாழ்வு


வறண்ட காட்டில்
விழுந்த செந்தணலின்
அகன்ற வாய்க்குள்
விழுந்த பசும் செடியாய்

தேவைகளால் துாண்டப்படும்
உணர்வுகளை
கடிவாளமிடமுடியா  மனங்கள்
ஆசை ஆற்றில் நீந்துகின்றது


புதுமை என்ற பேரண்ட சக்தி
பண்பாட்டை
பழமை வாதம் என்ற பேர்சூட்டி
சிறைச்சேதம் செய்கின்றது

இரத்தமும் சதையும்
நிறைந்த இதயத்துக்கு
காதல் என்ற உணர்ச்சி சாயம் பூசப்பட்டு
இனச்சேர்க்கை அரங்கேருகின்றது

பிரிவு என்பதை இணையும் போதே
அறியாத உள்ளங்கள்
பிணக்குகளில் பிரிவதற்கான காரணங்களை
தேடுகின்றது

தங்கள் இரத்தங்களின்
எதிர்கால உரிமைக்காக
பரிமாற்றங்கள் மூலம்
பாசம் பிரிக்கப்படுகின்றது

தங்களுக்கு தாங்களே
தடையங்களை மறைத்துக் கொண்டு
அடுத்த கட்டுமானத்திற்கு
அத்திவாரம் தோண்டப்படுகின்றது

இது மறுவாழ்வு
ப.பார்தீ
11/03/2012

No comments:

Post a Comment