Sunday, 25 March 2012

மாயக்காதல்


மலர் போல்
மங்கை ஒப்ப
மன்னனும்
மலரை நோக்க
மதியது

மயக்கம் கொள்ள
மலருதே காதல்



அரனதில் இருக்கும்
அரசன்
அவளிடம்
அன்பைச் சொல்ல
அல்லியும்
அறிவைத் துலைக்க
அழிந்ததே பெண்மை



கண்டதும் காதல் கொள்ள
கண்ணனின் லீலை இங்கு
காமனால் ஆட்சி செய்ய
கருவுடன்
கரைதல் ஆனால்
கண்கெட்ட
கன்னி இங்கு



மானத்தை
மாண்பென்றெண்ணும்
மாந்தர்கள் வாழும் பூமி
மாதுவை
மயிரென எண்ண
மாய்த்ததே
மாயக்காதல்

ப.பார்தீ

No comments:

Post a Comment