Thursday 29 March 2012

தாய்மையே சேயாகு


ஒத்த உசுருக்குள்ள
ஒரு உசுரு வந்து நின்று
நத்தை வாழ்கையாய்
நளினங்கள் செய்கிறியே

தொட்டுப் பார்க்கவா
சுகத்தை சுவைக்கவா
தட்டுத் தடுமாறி
தலை கால் தடவவா

உள்ளே இருந்து கொண்டு
ஊமைக்கதை சொல் கிறியே
வில்லாய் வளைந்து
வீரத்தோடு உதைக்கிறியே


வந்த நாள் முதலாய்
வலியோடு சுகம்தந்தாய்
பெண்டீர் யாவர்க்கும்
பெரும் பதவி தந்து நின்றாய்

உண்டி சுருங்க
உணவைக் குறைப் போர்க்கு
வண்டி பெரிதாக்கி
வலியும் தந்து நின்றாய்

காடாளும் வேடருக்கும்
நாடாளும் அரசனுக்கும்
வரும் வழி ஒன்றாக்கி
வர்க்க பேதம் போக்கி நின்றாய்

வெட்டருவா மீசையும்
வீச்சருவா வீரமும்
மட்டற்ற முழுமை பெற
வயிற்றில் நீ வந்தாயே

சொந்த சுவாசம் இல்லை
சோற்றுக்கு கடன் இல்லை
பற்றாத சொந்தமில்லை
பார் பாடு தேவையில்லை

தொப்பிள் கொடியறுத்து
தொல்லை உன்னை செய்யும் வரை
தப்பு ஏதும் செய்ய மாட்டாய்
தாய்மைக்குள்ளே நீயுறங்கு

இந்த இன்பம் காண
இறந்து நான் தரிக்கவா
ப.பார்தீ

No comments:

Post a Comment