Monday, 27 August 2012

சுதந்திர தாகம்



அவர்கள் கல்லறைகளில் இருந்து
அதற்கான கருவறைகள்
திறக்கப்படட்டும்

எதிர்கால தேவை உணர்ந்த
விடுதலை விரும்பிகளின்
வார்தைகளில் இருந்து பிறக்கட்டும்

எண்ணப்பட்ட சடலங்களின்
ஏக்கங்களில் இருந்த
பூத்தெழட்டும்

சீரழிக்கப்படும் சேலை 
நுால்களில் இருந்து
நெய்யப்படட்டும்



விழுங்கப்படும் மொழிகளின்
அழகில் இருந்து
ஆர்ப்பரிக்கட்டும்

புதைபொருளாய் சிதையும்
பண்புகளில்இருந்து
பாய்ந்து எழட்டும்

கணக்கில் எண்ணப்படாத
முள் வேலிகளில் உடைப்பிலிருந்து
ஊர்ந்து வரட்டும்

எங்கே அவர்கள் என்ற கேள்வியில்

நாமும் அவர்களில் இருந்தே
என்று தோற்றம் பெறட்டும் 
ப.பார்தீ

No comments:

Post a Comment