Wednesday, 15 August 2012

உடைக்கப்படாத பூவிலங்கு



நாங்கள் வாயை
மூடிக் கொண்டிருந்தால்
இந்தப் பாடலை இசைப்பது யார்

ஆணும் பெண்ணும்
இந்தப் பாடலை இசைப்பதற்காகவே
படைக்கப் பட்டிருக்கிறார்கள்


இங்கு மட்டும் என்ன
அதிசயம்
காலம் சந்தர்ப்பம் தந்து விடும்

இந்த பாடல்
இசைக்காமல் போனால்
இந்த பிரபஞ்சம் ஏது

மனிதன் மட்டும் என்ன?
எல்லாம்
மூன்று காலத்திலும்
பாடுகின்றன

இந்த பாடலை
பாடாமல் போனால்
காதல் ஏது ?

காதலியே
பாடுவது காதலின்
உச்சஸ்தாயி

உணர்வதை விட
பாடுவதே பிரபஞ்ச அழகு
ப.பார்தீ

No comments:

Post a Comment