Sunday 26 August 2012

வாடா மலர் தோட்டம்


நீ பதித்த தடங்களிலே
நினைவு பூத்தெழுக
நின் தூர சுமை மட்டும்
நெஞ்சுடைத்து விம்மி எழ

அங்கோர் மழைக்காலம்
ஆழ் மனது குடை தேட
கீழ் திசையும் மேலாகி
கரு முகிலில் ஆழ்ந்துவிட

காலைக் கரு உடைக்கும்
சேவலினம் தூக்கம் விட
வேலைச் சுமை பருகி
நீந்தும் மானிடர்போல்

ஏதோ நிலை மாறி
என் இதயம் சந்தம் கெட
கண்ணின் திரை தனில்
உன் விம்பம் பதிவாக

எனக்கான பொழுதுகளோ
என்றும்  இருண்டதில்லை
காற்றின் திசைமட்டும்
உன் மேனி தீண்டுதென்று
கை நிறைய சேர்துவைத்தேன்


போதும் இத்தூரம் புன்னகையே

வெள்ளிக்குடம் எடுத்து
மல்லிப் பூ  நீ வைத்து
மெல்ல நடை பயின்று
மேனியது  சூடெழுந்து
மஞ்சத்தில்  சஞ்சரிக்க

மாலை இடும் நாள்க்காத்து
மண்ணாகி மரமாகி மலராகி
என் நாளும் உனை தேடி
ப.பார்தீ

No comments:

Post a Comment