Friday 24 August 2012

தவிப்பு



நினைவுச்சுமைகளுடன்
நிலா முகம் காண
நிழலில் கரை பொழுதாய்
அரளி  விதை தேடும்
ஆத்ம காதல்

வலிக்கும் அவன் உள்ளம்
வரைந்த நாளை எண்ணி
துடிக்கும் இதயத்திடம்
சொந்த உயிரும்  கடன்  கேட்கும்

சொர்ப்பனத்தில் எல்லாமாய்
இருந்த பொன் நாட்கள்
அர்ப்ப அமைதியினால்
அகல வாய்திறக்கும்

வித்தகியே இத்தூரம்
போதும் என்றேன்



நானும் நீயும்
அங்கும் இங்குமாய்
அந்தரத்தில் ஊடல் வேண்டாம்

இருள் ஒன்று விடியலுரும்
இது போதும் பூங் கொடியே
பசு மரத்தின் இலை போல
உன் பாசம் அழகன்றோ

தவித்த வாய்கு நீர் கேட்க
தாமரை தர மறுத்தால்
மறு ஐென்மம் வேண்டி
மண்வாசம் முத்தமிடும்
ப.பார்தீ

No comments:

Post a Comment