Tuesday 4 September 2012

தேர்



நகர வாசல்  அடைக்கப்பட்டு
இறக்குமதி செய்யப்பட்ட
அலங்காரங்களில்
ஊற்றாகிப்போன மூடப்பழக்கங்களுடன்
மூன்றாம் உலக யுத்தத்திற்கு
தயாரான குண்டுகள் போல்
குவிக்கப்பட்ட தேங்காய்களுக்கு
பத்திமுலாம் பூசப்பட்டு
புனிதம் என்ற சொல்லுடன்
வீதியில் குவிக்கப்பட்டிருந்தது

என்றோ ஓர் நாள்
இயற்கைக்கு புறம்பான
உருவத்ததோடு கூடிய 
அந்த சிலை ஏற்றப்பட்ட
ஊர்திக்கு சக்தி கொடுக்க
மனிதர்கள் 


எல்லாம் சத்தி மயம் என்று எண்ணி
வீதியில் விழுந்த நீரினை
கண்ணில் ஒற்றும் காட்சி
பார்வையின் உண்மைத் தன்மையை 
கேவலப்படுத்தியது

பசியின் உணர்வை மறந்த வயிருகள் எல்லாம்
இலவச சோற்றுக்கு
இன்னும் பைகள் நீளாதா
என்ற எக்கத்தில்
முண்டி மோதியது

விசித்திரமான காட்சிக்
சாம்பல் நிறப்பப்பட்ட
சட்டியில் தீச் சுவாலை 
பருக நீர் இல்லாத வறுமையில்
உலகம் வாடும்போதும்
செம்பு நிறைந்த பால்
பாழடிக்கப் படுகின்றது
எல்லாம் அவர்கள் செய்தும்
அவனுக்கே போகுதென்பார்
ஓர் சொல்லில்

இனும் அந்தக் காடசிகளில் இருந்து சிலிர்த்தெழாத 
மனச்சாட்சிகள்
அடுத்த வருடத்திற்கு
அடிக்கல் இட்டு
தங்களை புனிதராக எண்ணி
மீண்டும்  மீணடும் உணவின் நடுவே
நஞ்சை விதைப்பர்
6ம் அறிவு இருந்து என்ன பயன்
ப.பார்தீ

No comments:

Post a Comment