Tuesday 18 September 2012

தூரத்தில்



வரிகளில் அடக்கமுடியாத
வசந்தகாலப் பிறப்பொன்றின்
இரம்மியமான நினைவுகளில்
தூசிதட்டப்பட்ட நிலாமுகத்தின்
ஒப்பனையை தொலைத்து விட்டு
தேடும் பிரிவு

வர்ணக்கலவையினால்  வீசப்பட்ட 
எண்ண ஓட்டம்
இயற்கையில் கண்டிராத
வர்ணத்தை தீட்டி நிற்கும்


கலக்கமற்ற குழப்பம்  ஒன்றின்
தேடலுக்கு
மருத்துவத்தால் விடை காணத்துடிக்கும் போது
அதிசயம் ஒன்றை ஆராய்ந்து பதிலளிக்கும்
விஞ்ஞானம்

வார்த்தைகளில் இருந்து 
சில வசனங்களை திருடுவதற்கு
நினைவுகளை மீட்கும் போது
மீண்டும்  ரீங்காரமிடும்
காற்றில் சேமித்து வைத்த
அந்த இனிய ஒலி

நரம்புகளில் இசை பிறக்கும் போதும்
ஞாபகம்  வைத்திராத கருவிகள்
மீண்டும்
இசைப்பவன் வருகைக்காய்
காத்து நிற்கும்
ப.பார்தீ

No comments:

Post a Comment