Sunday 14 October 2012

உப்புக்கண்டம்



தினமும் நான் 
விழிக்கும் பாரிஸ் நகரம்

நடக்கும் போதே 
என் வேகத்தைக் காட்டிலும்
நாகரீகம்  இறக்கை கட்டி
மாற்றங்களுடன் இமயத்துக்கு மேலால்
ஏழனம் செய்கின்றது


எங்கள் கடமைகள்
பயணங்கள் எல்லாம் நிலத்துக்கு கீழே 
உருவாக்கப்பட்ட  அற்புதங்களுடன்
அதிகம் இருட்டில்லாத
ஒழியுடன் கழிகின்றது

அடுத்த வல்லரசுக்காக 
போட்டியிடும்போதும்
அளவுக்கு மீறிய கை ஏந்தள்கள்
ஆசையை அபகரிக்க
பலம்  உள்ளவனுக்கு வெற்றியும் கிட்டுகின்றது

ஆறுகாலங்கள் ஆதவன் உதயம்
ஆகாயக் காட்சிகள்
நீரில் நனைதல் நிலத்தில் நடத்தல் யாவும்
காலநிலை அறிக்கையின் பார்வையிலேயே
கரைந்து விடுகின்றது

பழமைகளை 
புதுமைகள் தீண்டும்போதும்
இங்கு பழைமைகள் புதுமைகலாகவே
பயணிக்கின்றது

செலவுகள் வரவுகளை தேடும்போதும்
செலவுகள் செலவுகளாக
உதவிகளை தேடும் 
வாழ்கை முறைக்கு 
உப்புக்கண்ட எச்சங்களாக
மாற்றமுடியாத
சேமிப்புகள் சிதறடிக்கப்படும்
நாகரத்தின் தலைவாசலில்
நானும்
ப.பார்தீ

No comments:

Post a Comment