Sunday 2 December 2012

அற்புதம்



காலநே உன் காலடியில்
மிதிபட்ட காகிதம் ஒன்றில்
பொறுக்கிக் கோர்க்கப்பட்ட எழுத்துக்களுக்கு
பிணம் ஒன்றின் சுவை கேட்கும் மானிட கொளரவங்கள்

இயற்கையின் சீரில்தான் உலகம்
இயங்குகிறது என்றாலும்
தனிமனித உணர்வுக்கும்
உறுவ அமைப்புக்கும்
ஒற்றுமை தேடுகின்றது ஊண்பட்ட உள்ளங்கள்

பாடையில் ஏற்றப்படும்போது
பரிசாக கிடைக்கும்
பிணம் எனும் நாமத்தின் பின்
நாம் வாழ்ந்த வாழ்வை
நாம் எண்ண முடியாது போகின்றபோதும்
அற்புதம் ஒன்று நிகழ்ந்து விடாதா என
எண்ணும் மனங்கள்
இருந்தும் என்ன செய்யப்போகின்றுது

விதி ஒன்று சமைப்பதற்கு வழி தேடித்தேடி
வாழ்வே போராட்ட பாதையாகியபோது
நான் மூடநினைத்த  என் தோட்டத்திற்கு
மீண்டும் நீர் ஊற்றிவிட்ட
வானம் அவள்
ப.பார்தீ

No comments:

Post a Comment