Sunday 6 October 2013

சாடை


கரையா பொழுதிலே
கவிதையும் வானமும்
நிலவுக்கு முத்தமிட
தாமரையின் மேலமர்ந்து
தாலாட்டுப் பாடிஎழ

மலை ஒன்றின் உச்சியதாய்
நீர் வீழ்ச்சி சல சலத்து
மௌனத் திரை உடைந்து
தாய் மார்பாய்
பால் சுரக்க

பூ வாடை கீற்றாகி
பூங்குழவி மேனிதொட
மெல்லக் கிளர்ந்தெழுந்து
தாய்மைக்குத்
தாயாக

நிலவும் வானமும்
கண்ணீரால் மொழி பேசி
பருவம் பக்குவத்தை
பார்வைக்குள் 
புதைத்ததுவே
ப.பார்தீ

No comments:

Post a Comment