Thursday 24 October 2013

எனது தாயகம்


என் தாயகம் 
அதுவே எனது தாய்மடி
எனது காதலின் தேசம்
குருதியின் ஓட்டம்
உள்ளக் குமுறல்

அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்ததேசம்
அதிகாரத்தின் சட்டைகளை கிழித்ததேசம்
அகில உலகையும் ஆட்டிய தேசம்


நேற்று
எல்லைகள் சமைத்து
மொழி,பண்பாடு,தேசியம்,சதந்திரம்,
என வாழ்ந்ததேசம்

இன்று
பசியால் மெலிந்து பண்பைத் தொலைத்து
காயங்கள்மீது வலிகள்தோண்டி
பேச்சுக்களில் நீண்ட
தலைவர்களின்
கசப்பு எண்ணங்களுக்கு
தீ மூட்டப் போகும் அக்கினிக்குளம்பு

இது ஆசியாயின்
இன்றய இராசநகர்வு

எனது தாயகம் தமிழ் ஈழம்
ப.பார்தீ

No comments:

Post a Comment